அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இனி இலவச சிகிச்சை: முதல்வரின் அதிரடி உத்தரவு

govt_hosptal_001டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துவகைகள் இலவசமாக அளிக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற மேம்பாலம் திறப்புவிழாவில் பங்கேற்ற முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் அந்த பாலத்தை திறந்து வைத்துவிட்டு பேசுகையில், டெல்லி பொதுப் பணித்துறையினரால் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்ட இந்த மேம்பாலம், 300 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மூன்று பாலங்களை கட்டியவகையில் மட்டும் 350 கோடி ரூபாய் மிச்சமாகியுள்ளது.

இந்த தொகையை கொண்டு டெல்லியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துவகைகளும் இலவசமாக அளிக்கப்படும்.

மேலும், அரசு மருத்துவமனைகளில் இனி எந்த சேவைக்கும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும், அனைத்துவித சிகிச்சையும் இலவசமாகவே அளிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: