டெல்லி: உலகிலேயே அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு 2-வது இடம் கிடைத்துள்ளது. முதலிடத்தில் சீனா உள்ளது. 2015-ம் ஆண்டிற்கான விவசாய புள்ளிவிபரம் அடங்கிய ‘horticultural statistics at a glance 2015’ என்ற கையேடு ஒன்றை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில் விவசாயத்தில் காய்கறிகளை விட பழங்களை இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் பழங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவிற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது என்றும் சீனா முதலிடத்தில் உள்ளது என்ற தகவலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, மகாராஷ்டிரா மாநிலம் பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேச ஆகிய மாநிலங்கள் உள்ளன.
குறிப்பாக, 2014-15-ம் ஆண்டில் பழங்களிலேயே அதிகமாக இந்தியாவின் திராட்சைப்பழ ஏற்றுமதி ரூ.1,086 கோடி அளவில் 107.3 ஆயிரம் டன்களை எட்டியுள்ளது. மாம்பழம் மற்றும் வாழைப்பழ ஏற்றுமதியும் உச்சத்தை தொட்டுள்ளன.
அதிக அளவில் பழங்களை உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்:
சீனா – (154.364 மில்லியன் டன்)
இந்தியா – (82.631 மில்லியன் டன்)
பிரேசில் – (37.774 மில்லியன் டன்)
அமெரிக்கா – (26.986 மில்லியன் டன்)
ஸ்பெயின் – (17.699 மில்லியன் டன்)
மெக்ஸிகோ – (17.553 மில்லியன் டன்)
இத்தாலி – (16.371 மில்லியன் டன்)
இந்தோனேசியா – (16.003மில்லியன் டன்)
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.