சிக்கிம் மாநிலத்தை இயற்கை விவசாய மாநிலமாக அறிவித்தார் பிரதமர் மோடி

organic_state_sikkim_005இந்தியாவின் முதல் இயற்கை விவசாய மாநிலமாக சிக்கிம் அதிகாரபூர்வமாக பிரதமரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் இயற்கை விவசாய விழாவினை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, சிக்கிமில் இனி ரசாயனப் பொருட்களின் விற்பனைக்கும் அதைப் பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

சிக்கிம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் நிலையை கடந்த ஆண்டு டிசம்பரில் எட்டியது.

75 ஆயிரம் வேளாண்மை நிலத்தைக் கொண்ட சிக்கிம் மாநிலம் முற்றிலும் இயற்கை விவசாயத்திற்கு மாறும் முடிவினை கடந்த 2003 ஆம் ஆண்டில் எடித்திருந்தது.

இந்தியாவில் உற்பத்தியாகும் 1.24 மில்லியன் டன் இயற்கை வேளாண்மை பொருட்களில் 80 மில்லியன் டன் பொருட்களை சிக்கிம் உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: