தமிழகத்தின் கல்லூரிகளில் ‘சாதிப் பாகுபாடு’: மாணவர் குரல்கள்

Campus Clashஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் கடந்த ஞாயிறன்று தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் எதிரொலியாக இந்தியாவின் பல முக்கிய நகரங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

ரோஹித் வேமுலா என்ற அந்த மாணவனின் தற்கொலைக்கு சாதிப் பாகுபாடே காரணம் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.

தலித் வகுப்பைச் சேர்ந்த ரோஹித் வேமுலா தனது பிறப்புதான் துயரத்துக்குரிய விபத்து என்று தற்கொலை செய்யுமுன் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசு இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஒரு ‘உண்மை அறியும் குழுவை’ ஹைதராபாத் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியிருக்கிறது.

இந்த பின்னணியில், தமிழகத்தின் கல்லூரிகளிலும் தொடர்ந்து சாதிப் பாகுபாடு நிலவுவதாக அங்கு கற்கும் மாணவர்கள் பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்துள்ளனர். -BBC

TAGS: