சுபாஷ் சந்திர போஸுக்கு ‘தேசத்தந்தை’ பட்டம் அளிக்க வேண்டும்: மேற்கு வங்க முதலமைச்சர்

Netaji_Subhas_Chandra_Boseநேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ‘தேசத்தந்தை’ என்ற பட்டம் அளிக்கப்பட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

நேதாஜியின் 119-வது பிறந்தநாளையொட்டி மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜீலிங் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் மம்தா பானர்ஜி இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டைவிட்டு நேதாஜி வெளியேறினார்.

ஆனால், இதுவரை அவரது மறைவுக்கான சரியான காரணம் குறித்து நம்மால் சரியாக தெரிந்துகொள்ள முடியவில்லை.

அவருக்கு என்ன ஆனது? என்பதை அறிந்துகொள்ளும் உரிமை இந்த நாட்டுக்கு உண்டு. உண்மையை தெரிந்துகொள்ளும் உரிமை நமது மக்களுக்கு உள்ளது.

இதுதொடர்பான உண்மை உரிய ஆவண ஆதாரங்களுடன் வெளியிடப்பட வேண்டும்.

மேலும், நேதாஜிக்கு ‘தேசத்தந்தை’ என்ற பட்டம் அளிக்கப்பட வேண்டும். அந்தப் பட்டத்துக்கான அனைத்து தகுதிகளும் நேதாஜிக்கு உண்டு என பேசியுள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: