டெல்லி: பெண் சிசுக் கொலையைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாக நிபுணர்கள் குழு, சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெண் சிசுக்கொலை தொடர்பாக ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு ஒன்றை அமைத்திருந்தது. தற்போது இந்தக் குழு தங்களது அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது.
அதில், மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தால் மட்டுமே பெண் சிசுக் கொலையை தடுக்க முடியும் என்று அந்தக் குழு தெரிவித்துள்ளது.
கடும் கட்டுப்பாடுகள்…
டாக்டர்கள், ஸ்கேன் சென்டர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க இந்த குழு பரிந்துரைத்துள்ளது. இதன் மூலமாக மட்டுமே நாடு முழுவதும் பெண் சிசுக் கொலையை அறவே தடுக்க முடியும் என்று அது கூறியுள்ளது.
புள்ளிவிபரம்…
நாடு முழுவதும் ஆண்டுதோறும் 5 லட்சம் சிசுக்கள் அழிக்கப்படுவதாக சமீபத்திய புள்ளிவிவரத் தகவல் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவில் அதிகம்…
வட இந்தியாவில்தான் பெண் சிசுக்கொலைகள் அதிகம் இருப்பதாகவும் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு கோடி பெண் சிசுக்கள்…
யுனிசெப் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் 2007ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு கோடி பெண் சிசுக்கள் கொல்லப்பட்டுல்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
குறைந்து வரும் பெண்கள்…
இந்தியாவின் 80 சதவீத மாவட்டங்களில் 1991ம் ஆண்டுக்குப் பிறகு பெண்களின் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
பாலின சமச்சீர் பாதிப்பு…
பெண் சிசுக் கொலை காரணமாக, ஆண் – பெண் பாலின சமச்சீர் நிலையும் பாதிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ள நிபுணர் குழுவான தேசிய ஆய்வு மற்றும் கண்காணிப்புக் கமிட்டியின் உறுப்பினர்களான சபு மாத்யூ ஜார்ஜ் மற்றும் வர்ஷா தேஷ்பாண்டே ஆகியோர் கூறியுள்ளனர்.
மாநில அரசுகளுக்கு உத்தரவு…
இவர்கள் தங்களது குழுவின் அறிக்கையை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சில் தாக்கல் செய்துள்ளனர். இந்த பரிந்துரைக்கு பதில் அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோரட் உத்தரவிட்டுள்ளது.
சஸ்பெண்ட்…
இந்தக் குழுவின் முக்கியப் பரிந்துரைகள் இவைதான். அதாவது பெண் சிசுக் கொலைக்குக் காரணமான டாக்டர் குற்றம் சாட்டப்படும்போது அவர் முதலில் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.
தடை…
அந்த டாக்டர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவர் தண்டிக்கப்பட்டால் அவர் 5 வருடம் மருத்துவம் பார்க்க தடை விதிக்கப்பட வேம்டும்.
சோனோகிராபி இயந்திரங்கள்…
மருத்துமநைகள் மற்றும் ஸ்கேன் சென்டர்கள் உரிய சட்டப்படியான அனுமதியுடன் மட்டுமே சோனோகிராபி இயந்திரங்களை வாங்க வேண்டும். அப்படி வாங்காத மையங்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கக் கூடாது.
ரேடியாலஜி சேவை…
ஒரு மருத்துவமனையானது, உரிய முறையில் அங்கீகாரம் பெறாத 3வது தரப்பிடமிருந்து ரேடியாலஜி சேவையைப் பெறக் கூடாது.
பரிந்துரை…
பாலினத்தைக் கண்டுபிடிக்க முன்பு அல்ட்ரா சோனோகிராபி மட்டுமே இருந்தது. தற்போது வேறு பல வசதிகளும் வந்து விட்டதால் அவற்றையும் கண்காணிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பரிந்துரைகளை இந்தக் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாருக்குளே நல்ல நாடு எண்கள் பாரத நாடு ……
.உலகில் படிப்பறிவில்லாத மக்கள் அதிகம் வாழும் நாடு கூட இதுதான் …
எனவே செய்தி வியப்பை தரவில்லை