கடலில் மூழ்கி 14 மாணவர்கள் பலி: சுற்றுலாவின் போது பரிதாபம்

maharastra_students_001மகாராஷ்டிர மாநிலத்தில் சுற்றுலா சென்ற மாணவர்களில் 14 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் உள்ள முருட் கடற்கரைக்கு புனே ஆபேதா இனாம்தார் கல்லூரியை சேர்ந்த 143 மாணவ, மாணவிகள் மற்றும் 11 பேராசிரியர்கள் சுற்றுலா சென்றிருந்தனர்.

அப்போது மாணவர்களில் சிலர் கடலில் இறங்கி குளித்துள்ளார்.

திடீரென கடலில் எழுந்த ராட்சத அலைகள் குளித்து கொண்டிருந்த மாணவ, மாணவி 4 பேரை வாரி சுருட்டி உள்ளே இழுத்து சென்றது.

அவர்களை காப்பாற்றுவதற்காக கடலில் இறங்கிய மாணவர்களும் அலையில் இழுத்துசெல்லப்பட்டனர்.

இந்நிலையில் கடற்கரையில் இருந்த மீனவர்கள் சிலர் கடலுக்குள் குதித்து மாணவ, மாணவிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அவர்கள் தண்ணீரில் தத்தளித்த 18 பேரை மயங்கிய நிலையில் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இதில் 14 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துபோயினர். மயக்க நிலையில் இருந்த 4 பேர் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மற்ற மாணவர்களின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை.

கடலில் மூழ்கி மாணவர்களை மீட்க தீயணைப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

கப்பற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.newindianews.com

TAGS: