தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்கள் தலித் எதிர்ப்பு மாவட்டங்கள்!

dalit
தமிழ்நாட்டில் ஜாதிய வன்முறைகளில் அதிகம் பாதிக்கப்படுவது தலித்துகள் என்கின்றன புள்ளிவிவரங்கள்

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் இருக்கும் குருவித்துரை கிராமத்தில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாக் கொண்டாட்டங்களின்போது தலித்துகளுக்கும் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட ஜாதிமோதலை நேரில் சென்று விசாரித்த ஆதிதிராவிடர்களுக்கான தேசிய ஆணையம், அந்த குறிப்பிட்ட கிராமத்தை வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ள கிராமமாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது.

இந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்த அந்த ஆணையத்தின் துணை இயக்குநர் பி ராமசாமி இந்த பரிந்துரையை செய்திருந்தார். அவர் நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றார்.

பிபிசி தமிழோசைக்கு செவ்வியளித்த அவர் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் தலித் வன்கொடுமை ஆபத்திருக்கும் மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக தெரிவித்தார். -BBC

TAGS: