காவிரியில் கழிவு நீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லை …. கர்நாடக முதல்வர் அடாவடி பேச்சு

siddharamaiahபெங்களூரு: பெங்களூருவிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் காவிரியில் கலப்பது பற்றி கேட்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, திருவாரூர் உள்ளி்ட்ட மாவட்டங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கும் காவிரியில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கலப்பதால் காவிரி நீர் பெருமளவில் மாசடைகிறது. இதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இவ்வழக்கில் கர்நாடக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையாவிடம் இவ்விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்  கழிவு நீர் காவிரியில் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமை இல்லையென்றார். காவிரி விவகாரத்தில் தொடர்ந்து பிடிவாத போக்குடன் செயல்பட்டு வரும் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மீறி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்து வருகிறது. இந்நி்லையில் டெல்டா மாவட்டங்களின் நீர் ஆதாரமான காவிரியில் கழிவு நீர் கலப்பது பற்றி பேச தமிழகத்திற்கு உரிமையில்லை என சித்தராமையா கூறியிருப்பது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-http://www.dinakaran.com

TAGS: