திருச்சியில் மதுவிலக்கை வலியுறுத்தும் மாநாட்டில் மக்கள் கலை இலக்கிய கழக பாடகர் கோவன், “சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ…” என்ற பாடலை பாடியுள்ளார்.
”மூடு டாஸ்மாக்கை மூடு.. ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு போயஸில உல்லாசம்” என்ற மதுவிலக்கை வலியுறுத்தும் பாடலை பாடிய காரணத்திற்காக தேசத்துரோக வழக்கில் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் இதில் நீதிமன்றம் தலையிட்டு கோவன் ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் ம.க.இ.க.வின் மற்றொரு அமைப்பான “மக்கள் அதிகாரம்” சார்பாக திருச்சி தென்னூரில் கடந்த 14ம் திகதி டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் பாடகர் கோவன் பாடிய பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அந்த பாடல் வரிகள்:
சரக்கை உட்டுக்கோ சைடிஸை தொட்டுக்கோ..
குடி சிந்திக்காதே குடி…
ஆத்து மணல் கொள்ளையைக் கண்டுக்காமல் இருந்துக்கோ..
ஆவின் பாலில் சோப்பு நுரை..
ஆயிரம் கோடி தியேட்டர் டீசர்ன்னு நினைச்சிக்கோ..
குடி சிந்திக்காதே குடி…
அரிசி விலை ஏறுதுன்னா அம்மா மெஸ்ல துன்னுக்கோ..
வீட்டுக்குப் போனா பேஜாருன்னா டாஸ்மாக்ல தூங்கிக்கோ..
குடி சிந்திக்காதே குடி.. என கோவன் பாடியுள்ளார்.
-http://www.newindianews.com
அரசியல்வாதிகள் குடித்து குடித்து எல்லாமே மரத்துப் போய் விட்டது! எதுவும் மண்டையில் ஏறாது!