சென்னையை சேர்ந்த பாக்ஸர் துளசி ஹெலன், சர்வதேச அளவில் விளையாடி வரும் தமிழ்ப் பெண்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்தாலும் தன் சொந்த முயற்சியின் மூலம் தடைகளை தாண்டி 16 வருஷமாக பாக்ஸிங் பயணத்தில் பல்வேறு மெடல்களை வாங்கி குவித்துள்ளார்.
மாநில அளவில் 32 மெடல்கள், தேசிய அளவில் ரெண்டு முறை வெண்கலப் பதக்கமும், உலக அளவில் ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப்பதக்கமும் வாங்கியிருக்கிறார்.
இருப்பினும் ஒரு சில காரணங்களினால் திறமைக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டது குறித்தும், உலக அளவில் தான் வாங்கிய விருதுகள் குறித்தும் நம்முடன் பகிர்ந்துள்ளார் துளசி ஹெலன்.
சமீபத்தில் உலகத் தமிழ் வர்த்தக சங்கம் வழங்கும் ‘சாதனைத் தமிழச்சி’ விருதை, உலகத் தமிழர் திருநாள் விழாவில் ஆளுநரிடமிருந்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://world.lankasri.com