மே.வங்க தேர்தல்: மமதா பானர்ஜிக்கு எதிராக நேதாஜி பேரன் சந்திரகுமார் போஸை வேட்பாளராக களமிறக்கியது பாஜக

chandrakumarboseடெல்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் அம்மாநில முதல்வருமான மமதா பானர்ஜிக்கு எதிராக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பேரன் சந்திரகுமார் போஸை வேட்பாளராக நிறுத்தப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தின் 294 சட்டசபை தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக ஏப்ரல் 4-ந் தேதி முதல் மே 5-ந் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. மே 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்துள்ளன. இந்நிலையில் முதல்வர் மமதா பானர்ஜிக்கு எதிராக நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பேரன் சந்திரகுமார் போஸை வேட்பாளராக நிறுத்துவதாக பாஜக அறிவித்துள்ளது. டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இதை அறிவித்தார்.

மேற்கு வங்கத்தில் பாஜக எப்படியும் காலூன்ற நினைக்கிறது. தற்போது மமதாவுக்கு எதிராக நேதாஜி பேரன் சந்திரகுமார் போஸை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. ஆகையால் சந்திரகுமார் போஸ்தான் மேற்கு வங்க பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என தெரிகிறது.

tamil.oneindia.com

TAGS: