ஜாதிப் பிரிவினைகள் ஒழிய வேண்டும்- ராமநாதபுரத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு

vairamuthuராமநாதபுரம்: ராமநாதபுரம் கல்லூரி ஒன்றில் உரையாற்றிய கவிஞர் வைரமுத்து மாணவர்களுக்கு நடுவில் ஜாதி பிரிவுகள் இல்லை என்றும், தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை ஒழிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 28 ஆம் ஆண்டு கல்லூரி விழாவில் பங்கேற்று பேசினார் கவிஞர் வைரமுத்து.

அப்போது அவர், “நம்முடைய நாட்டில் தான் தெருக்களுக்கு ஜாதிபெயர் வைத்தார்கள். தற்போது அதை நீக்கிவிட்டார்கள். ஆனால் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கல்லூரிக்குள் வரும்போது அனைவருமே மாணவிகள் தான். இங்கு ஜாதிகள் .

அதேபோல் ஆண்கள் பின்னால் தான் ஜாதிகள் ஒட்டிகொண்டுள்ளது. எந்த பெண்ணும் பெயருக்கு பின்னால் ஜாதிபெயரை பயன்படுத்துவதில்லை.

தற்சமயம் மாணவ,மாணவிகள் ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துங்கள்,தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேமோ என்று தற்கொலை செய்யாதீர்கள். தன்னம்பிக்கையுடன் வாழுங்கள். வரும் தேர்தலில் தலைவர்கள் தேர்தல் அறிக்கையில் ஜாதிகளை ஒழிக்கவேண்இல்லைடும் என அறிக்கைகள் வெளியிடவேண்டும்”என்று தெரிவித்தார்.

tamil.oneindia.com