ராமநாதபுரம்: ராமநாதபுரம் கல்லூரி ஒன்றில் உரையாற்றிய கவிஞர் வைரமுத்து மாணவர்களுக்கு நடுவில் ஜாதி பிரிவுகள் இல்லை என்றும், தமிழகத்தில் ஜாதிப் பிரிவினை ஒழிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள தாசீம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் 28 ஆம் ஆண்டு கல்லூரி விழாவில் பங்கேற்று பேசினார் கவிஞர் வைரமுத்து.
அப்போது அவர், “நம்முடைய நாட்டில் தான் தெருக்களுக்கு ஜாதிபெயர் வைத்தார்கள். தற்போது அதை நீக்கிவிட்டார்கள். ஆனால் இன்னும் ஜாதிகள் ஒழியவில்லை. கல்லூரிக்குள் வரும்போது அனைவருமே மாணவிகள் தான். இங்கு ஜாதிகள் .
அதேபோல் ஆண்கள் பின்னால் தான் ஜாதிகள் ஒட்டிகொண்டுள்ளது. எந்த பெண்ணும் பெயருக்கு பின்னால் ஜாதிபெயரை பயன்படுத்துவதில்லை.
தற்சமயம் மாணவ,மாணவிகள் ஒருமுகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துங்கள்,தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேமோ என்று தற்கொலை செய்யாதீர்கள். தன்னம்பிக்கையுடன் வாழுங்கள். வரும் தேர்தலில் தலைவர்கள் தேர்தல் அறிக்கையில் ஜாதிகளை ஒழிக்கவேண்இல்லைடும் என அறிக்கைகள் வெளியிடவேண்டும்”என்று தெரிவித்தார்.
கலப்பு தமினக்கு எப்படி நமசிவய மந்திரம் தெரியும் ? நீ வேணும்னா உன் தெலுங்கு மொழியில் மந்திரம் படி .. செத்து போன மொழியில் மந்திரம் படிக்க வேண்டிய அவசியம் தமிழனக்கு ஏன் ? ( தமிழ் பூசாரிகள் சமஸ்கிரதத்தில் கூட ஓரளவுக்கு மந்திரங்களை உச்சாடனம் செய்து விடுவார்கள். அனால் தமிழில் உள்ள பாசுரத்தை அவர்களால் உச்சாடனம் செய்ய தெரியாது) என்னா கண்டுபிடிப்பு .. தமினக்கு தமிழ் தெரியாதுன்னு ஒரு கலப்பு தமிழன் சொல்லகூடாது . .. அம்மா தெலுங்குச்சி . இவன் வாயில் தெலுங்கு வாடை தானே வரும் .. நீ கூட இருந்தே குழிப்பறிக்கற ஒநாயினு தெரியும் ..
சூத்திர வடுகனுக்கு காயத்திரி மந்திரம் ஓதவேண்டுமேன்றால் ஓதவேண்டியதுதான் ..சூத்திரவடுகபய சூடு சொரனேயே இல்லாம புலம்புகிறதே ..
உச்சரிப்பை உமது தாய்மொழியில் உச்சாரணம் என்று பொருள்போலும் …
( உலகில் உள்ள எல்லா மனித இனக்களுக்கும் அவர் தம் மொழிகள் உண்டு. அவரவர் அவரின் விர்ப்பதின் பேரிலேயே வழி படுகின்றனர். இதில் குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை.) அதேதான் நாங்களும் சொல்கிறோம் தமிழர்க்கு தமிழ் உண்டு அதில் கலப்படம் இல்லை சுவையுண்டு இனிமையுண்டு நாம் எம் தாய்மொழியில் எமக்கு எது உகந்ததோ அதை நாம் பின்பற்றுவோம் ..உங்களுக்கு வடுக கலை பண்பாடு ஆரிய கலப்பு வாழ்க்கை சிறந்ததாக ஏற்று வழிபடலாம் தப்பில்லை ..நாம் யாருக்கும் எதிரியல்ல எம்மை சீண்டாதவரை .
வந்தவர்களை எம்மோடு அரவணைத்த பாவத்துக்காக அதிகாரத்தை கொடுத்து இனத்தை அளித்து மொழியை சிதைத்து பண்பாட்டை சீரழித்து வரலாற்றை குதறி தமிழினத்தை கருவறுக்க துடிக்கும் வந்சகர்களுக்காகா நாம் அனைத்தையும் விட்டுகொடுத்து மற்றவர்கள் எம்மை ரொம்ப நல்லவர்கள் என்கிற சான்றிதழ் கொடுக்க வேணாம்…
வடுகமண்ணு நீர் உண்மைலேயே உன் இனத்துக்காக மினக்கட்டு உழைக்கிறீர் ..உம்மை எண்ணி நாம் பெருமைபடுகிறேன்..ஓயாமல் சலித்துகொள்லாமல் பதில் எழுதிகிறீர் …
வேதாந்திகள்தான் அவர்தம் வருணாசிரம கோட்பாட்டை நிலைநிறுத்த “ஜாதிகள் என்பது மனித இனத்தில் மட்டுமா இருக்கிறது, மிருகங்களில் கூட உள்ளது, அனைத்திலும் உள்ளது” என்று உதாரணம் கூறி வருணாசிரம் கோட்பாட்டை எதிர்ப்பவர்களின் வாயை அடக்க முயற்சிப்பார்கள். இத்தகையோருக்கு சித்தாந்திகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பதில் கூறிவிட்டார்கள்.
சித்தாந்த சைவத்தில் உயிர் வேறு, உடல் வேறு என்று கூறும். சித்தாந்தம் உயிரைப் பற்றி மட்டுமே பேசும். உயிர்கள் பெறும் உடல் வகையில் 84 இலட்சம் யோனி பேதங்கள் உண்டு என்றும் கூறும்.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகிமுனிவராய்த் தேவராய்” என்று திருவாசகத்தில் சொன்ன இத்தனை பிறப்பிலும் அந்த 84 இலட்ச யோனி பேதங்கள் அடங்கி விடும். அதனால் மிருகத்தில் சாதி உண்டு என்பது அதன் உயிரின் அடிப்படையில் சொல்வதல்ல. அதன் உடல் பேதத்தினால் கூறும் இன வேறுப்பாடு. ஆனால் ஆரிய வேதத்தில் வருணாசிரம கோட்பாடு கூறப்படுவது உடல் பேதமல்ல. ஓர் உயிருக்கு பிறப்பால் வரும் பேதத்தைக் கொண்டு சாதியம் பேசுகின்றது. அதனால் வேதாந்தம் குறையுடைய நெறியாகின்றது. அதனை மறுப்பதே பதி பசு, பாசம் என இறைவனையும், உயிர் குலத்தையும், அந்த உயிரை பிணித்திருக்கும், ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களை வெவ்வேறு பொருளாக அறியும் சித்தாந்தம். அவ்வுயிர்கள் பக்குவமடைய வேண்டி ஓர் உடலைக் கொடுத்து, உலகத்தைப் படைத்து அதில் இன்ப துன்ப நுகர்ச்சிகளை வைத்தான் என்று கூறுவது சித்தாந்தம். அதனால் சிவாகமத்தின் அடிப்படையில் தோன்றிய சித்தாந்த சைவத்தில் சாதியத்திற்கு இடமில்லை. இடமில்லை. இடமில்லை. அதனால்தான் இந்து மதம் சிவாகமத்தின் ஞான பாதத்தை (அறிவு நெறி) எங்கும் முன் வைப்பதில்லை. இதனை அறியாத தமிழரில் பெரும்பாலோனோர் தங்களை இந்து என்று கூறிக் கொண்டு இல்லாத ஒரு மதத்தை தங்களுடையது என்று அடையாளமிட்டு கொண்டு சாதிய வேற்றுமையில் வாழ்கின்றனர். இது நம்மை ஆழ வந்தவர் சிவாகம உண்மையை மறைக்க நமக்கு கொடுத்த மத அடையாலம். என்னத்தைச் சொல்லி என்னத்தைச் செய்ய. எம்மக்கள் இப்படி இந்து மதம் என்ற பாழுங் கிணற்றில் வீழ்ந்து சாவதேன்?
மன்னன் உனக்கு உண்மையிலே வாய் கொழுப்புதான் , சாதி மனிதனக்கு மட்டும் இல்லை மிருகத்திருக்கும் உண்டுனு சொல்றியே எந்த மனிதனும் தன சொந்த தாயோட படுக்க மாட்டான் . மிருகம் வேற மனிதன் வேற .. நீ வேணும்னா மிருக சாதியா இருப்ப … மிருகத்திருக்கு தாய்ன்னு தெரியாது அக்கா தங்கச்சின்னு தெரியாது . சாதி பற்றி பேசி தமிழனை இவ்வளவு கீழ்தரமா பேசுறியே நீ என்ன …..?
“நமசிவாய” தமிழ் சொல் ? நம + சிவாய = தமிழ் சொல்? நம, நாமம் , நாமஹா தமிழ் சொற்கள் ?
இங்கே உள்ள பேர் அறிஞர்கள் விளக்கம் கூறுவார்களா ?
இங்கே சாதி ஒழிப்பு பற்றி பேசும் பல பேர் அறிஞர்கள் , மீண்டும் அரைச்ச மாவையே அரைக்காமல் சாதியை எப்படி ஒழிக்க முடியும் என்று கூற இயலுமா ? மற்றவர் கூற்றுக்கு மறுப்பு மட்டுமே வாய் கிழிய பேசும் அறிஞர்கள் முடிந்தால் சாதி ஒழிப்பு எப்படி ஆரம்பிக்க முடியும் கூறுங்கள் .
சாதியை உருவாகிய பார்பனன் இபொழுது நல்லவன் ! சாதியை உருவாகிய பார்பனனை உயர்ந்த சாதி என்று ஏற்றுக்கொண்டு , மற்றவர்களிடம் சாதி இல்லை என்று கூறிக்கொண்டு ஒருவர் மேல் ஒருவர் பலி போட்டு கொண்டிருபார்கலாம் !
மலேசியாவில் உள்ள பெரிய கோவில்களில் எவன் தலைமை அர்ச்சகன் ? அவன் சொல்படி தானே மற்ற கோவில்களில் செய்வார்கள் . அவன் சொல்லை தானே இந்த பெரிய கோவில்களின் “தலை ந..ய்கள்” கேட்கின்றன ? ஆக தலை எவ்வழியோ அவ்வழி தானே வால் ! பார்பனன் பற்றி பேசினால் என் பலருக்கு சுருக் என்று ஆகிறது ?
சின்ன பையன்.. யாம் கூறியதின் அர்த்தத்தை கூட புரிந்து கொள்ள உமக்கு அறிவு இல்லை. நீர் எல்லாம் தமிழரை பற்றி பேசுகிறாய். . உம்மை போன்ற இன்னை கொண்ட நம் தமிழர் இனம் தலை குனிவதை விட வேறு வழி இல்லை……….
சின்னப் பையனே தமிழன் என்றால் தாழ் குலம் மட்டும் அல்ல . உயர்ந்த குலமும் உண்டு. உமக்கு ஒன்றை நான் அறிவுறுத்த விரும்புகிறேன். யாம் இவிரு குலத்தையும் பதிக்கிறேன் ஏனெனில் யாவரும் மனிதன் மற்றும் இறைவனின் குழந்தைகள் என்று. எமது எழுத்தின் பொருள் உம்மை போன்ற அரைவேக்காடு காரனக்கு புரியாது.
காய்த்த மரம் கல்லடிப் படும் என்று ஒரு பழமொழி உண்டு. எதை ஒன்றையும் பொதுவில் பேசாமல் இருந்தால் அவர்களுக்கு எந்த ஒரு இழி சொல்லும் வராது. அதை விட்டு எம்மைப் போன்று வாய்கொழுத்துப் போய் பொதுவில் கருத்துக் கூற ஆரம்பித்தால் கல்லடி படத்தான் வேண்டும். நிற்க.
மனிதனை இரண்டு வகையில் வயப் படுத்தலாம். ஒன்று அன்பு மற்றது பயம். சாதியத்தை நீக்க வேண்டி, பிராமணரைக் காட்டி தமிழரை பயமுறுத்தி வளர்ந்த திராவிட இயக்கம் அரசியல் பலம் அதன் கைக்கு வந்தவுடன் தமிழரின் மீது அன்பு காட்டி சாதியத்தை வளர்க்க ஆரம்பித்தது. எப்படி?
தான் வளர ஒரு எதிரி தேவைப்பட்டான் அப்பொழுது கிடைத்தவன் பிராமணன். வளர்ந்தவுடன் மேலும் வளர ஒரு நண்பன் தேவைப்பட்டான் இப்போழுது கிடைத்தது ஏமாளித் தமிழன். அரசியல் பலம் தன் கைக்கு வந்தவுடன் தமிழர் மீது அன்பு காட்டி கல்வி வேலை வசதிகளை பெற்றுத் தர சாதியத்தை சட்டமாக்கியது தமிழக திராவிட இயக்கங்கள்தான். அப்புறம் சாதியத்தை ஒழி என்றால் எப்படி ஒழிக்க முடியும்? அதனால்தான் தமிழகத்துச் சாதியைப் பற்றிப் பேசாமல் மலேசியாவின் நிலையை கையில் எடுத்துக் கொண்டு பேசினோம். உண்மை புரியாமல் அன்னமிட்ட கையையே கடிப்பதில் அறிவுடமை இல்லை.
மலேசியாவில் அறிவுடைய தமிழன் யாராவது பிராமணனுக்கு அடிபணிந்து வாழ்கிறோமா? கடந்த 5-4-2016 திகதி செந்துல் ஆதீசுவரன் கோவிலில் யாழ்பாணத்து தலைவர் ஒருவர் ‘எங்கட ஆட்கள் மட்டுமே’ ஆலயத்தில் சேவை செய்ய முடியும் என்று கூறியதுடன், அங்கிருந்த அறிவார்ந்த பெண்மணிகளும் ஆண்களும் பொங்கி எழுந்ததை பலர் ‘whatapp’ – ல் பார்த்திருப்பார். உண்மை இப்படி இருக்க மலேசியாவில் நாம் பிராமணருக்கு அடிமையாக வாழ்கிறோம் என்றால் அது நமக்கு மானக்கேடு இல்லையா? அப்படியென்ன நாம் மதியீனமாகவா இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்?
மலேசியாவில் சாதிய ஒழிப்பைப் பற்றிப் பேசி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டு வாழ்கிறோம். எப்படி? இந்நாட்டில் தமிழரைச் சார்ந்த அரசியல் கட்சிகள் எப்படி வழி நடத்தப் படுகின்றன? சாதி இல்லாத கட்சி என்று சொல்லும் ம.இ.க. – வில் சாதியடிப்படையில் ஒட்டு சேகரிப்பது வெள்ளிடைமலை. IPF தோன்றியதும் சாதி அடிப்படையில்தான். இதையெல்லாம் பிராமணர்தான் வந்து துவக்கி வைத்தனரா? பழி ஓரிடம் பாவம் ஓரிடம். இதனால் பிராமணரை தூக்கிப் பேசுவதாக எண்ணம் கொள்வது அறிவின்மை. நமது பிரச்சனையை கையாள நமக்கு வக்கில்லாமால் போனால் நாம் பிறரைக் குறை கூறி என்ன பயன்? எத்தனை சாதி சங்கங்கள் வெளிப்படையாகவே செயல்பட்டு வருகின்றன இந்த மங்கள மலேசியாவில்? இத்தகைய கூறுகெட்ட தமிழர் ஏன் பிறர் மீது பழிபோட வேண்டும்? அன்று அவன் கொண்டு வந்தான் அதனால் இன்று நாம் பின்பற்றுகிறோம் என்று காரணக் காரியம் பல கூறலாம். அன்று நமக்கு அறிவில்லை. அடிமைப் பட்டு வாழ்ந்தோம். இன்று நாம் அப்படியா வாழ்கிறோம்?. நமக்கு அறிவில்லையா? நாம் இன்னும் அடிமை வாழ்க்கையா வாழ்கிறோம்? மேற்கூறிய கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில். இன்று நம்மிடையே இருக்கும் சாதிய போற்றுதலுக்கு காரணம் நாமே! முதலில் உண்மையை ஒத்துக் கொள்வோம். அப்புறம் இதிலிருந்து எப்படி விடை பெறுவது என்று கேட்ட கேள்விக்குப் பதில் காண்போம். சாதியம் எதிலிருந்து ஆரம்பித்தது. அது எப்படி பிறப்புரிமையாக ஆக்கப் பட்டது என்று அறிந்து முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். முன் பகுதியை யாம் விளக்கி விட்டோம். பின்பகுதியாகிய “வழிவகைக்கு” தாங்கள் தங்கள் கருத்தை முன் வைக்கலாமே. எமது கருத்தை இன்றிரவு பதிவு செய்வோம்.
முதலில் இங்கே உள்ள பேர் அறிஞர்கள் எனது மேலே உள்ள கேள்விக்கு பதில் சொல்லவும் . திசை திருப்ப வேண்டாம், தற்பெருமை வேண்டாம்.
அதிகமாக எழுதுவதநாளோ பெசுவதனலோ அல்லது உரக்க பேசுவதாலோ எந்த பிரச்னையும் தீர போவதில்லை .
மன்னா தமிழனுக்கு எங்கே இருக்கு தாழ்
குலம் மேல் குலம் ? இரண்டும் இறைவனின் குழந்தைன்னு வேற சொல்ற… முதலில் நீ தெலுங்க்கனை பத்தி கவலை படு … தமிழன் நல்ல இருப்பான் ..
தேனீ அருமையா தெளிவா பதில் சொல்லிட்டார், புரியவில்லையானால் திரும்பவும் உரக்க பேசமால் அதிகமா எழுதமா வெக்கபடாமல் படிக்கவும்
ஒத்து ஊதாமல் நமசிவாய என்ற சொல் தமிழா இல்லையா என்று சொல்லும் . திசை திருப்பி அதற்காக அதிகமாக எழுவதால் ஒத்து ஊதுவர்களுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் …….
தெளிவான அருமையான பதில் எல்லாம் கேள்வியை ஒட்டி இருக்க வேண்டுமே ஒழிய திசை திருப்பி அல்ல.
பிரச்சனைக்கு தீர்வுகாணும் வழிகள் சொல்ல இயலவில்லை ஆனால் சுத்தி வளைச்சி எதையோ எழுதி விட்டு அதை எல்லாம் படிக்க வேண்டுமாம் ……குறை சொல்லுவது சுலபம் என்று இதன் மூலம் நன்கு அறிய முடிகிறது …
மலேசியாவில் பெரிய கோயில்களில் பார்பனன் இல்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறப்பது போன்று .
சாதியை மற்றவர்கள் வளைக்கிறார்கள் என்று கூறும் ‘பேர் அறிஞருக்கு ” அம்பை எய்தவனை விட்டுவிட்டு அம்பை நோகுவதில் பயனில்லை என்பது தெரியாதா ? அவன் அன்று ஏற்ப்படுத்திய அமைப்பை தானே இன்று அனைவரும் ஏற்று நான் பெரியவன் நீ சிறியவன் என்று சண்டை போட்டு கொண்டிருகிறீர்கள் …பிரச்சனையின் மூலத்தை கண்டறியாமல் அதன் தாக்கத்தை பேசி அதுதான் பிரச்சனை என்று கூறுவது மூடத்தனம் .
மலேசியாவில் யாரும் பார்பனுக்கு அடி பணித்து இல்லை ? வீட்டு புது மனை புகு விழா , திருமணம் மற்றும் சடங்குகள் , கோவில் வழிபாடு , குழந்தைக்கு பெயரீட்டுவது என்று இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் ….இதில் எது தமிழ் முறைப்படி அல்லது பார்பனன் இல்லாமல் நடக்கிறது ? பார்பனன் கிடைக்கவிட்டாலும் அவன் வகுத்த வழிகளில் தானே செய்ய படுகின்றன ? இது அடிமை தானம் இல்லையா அறிஞர்களே ?
சுற்றி வளைத்து பேசவேண்டாம் அதற்கு ஒத்தும் ஊதவேண்டாம்
நீண்ட அறிவுரைகளை எழுத மனமில்லை காரணம் நோயைக் குணப்படுத்த மருத்துவர் எவரும் இங்கு இல்லை. மருத்துவரைக் குடைய மகான்கள் நம்மில் நிறையவே உள்ளனர்.
தமிழர் அன்பானவர், பண்பானவர் அனைவரையும் அரவனைப்பவர். இதெல்லாம் நமக்குத் தெரியும். தமிழர் சுட்ட மண் அல்ல. சுடாத களிமண். பிறர் நினைத்த மாதிரி தமிழரை எப்படி வேண்டுமானாலும் அவரவர் விருப்பப்படி களிமண்னை உருட்டித் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையாக்கலாம் என்று வரலாறு நமக்குக் கற்பித்தப் பாடம் நிறையவே உள்ளது. அந்த நிலையை இன்று நாம் மாற்ற நினைக்கின்றோம். ஆனால் தமிழினத்திற்கு எதிரி தமிழருள்ளே நிறையவே இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. அதனால்தான் நாம் உய்ய முடியவில்லை. புதை மண்னுக்குள் மாட்டிக் கொண்டு வெளியே வர முயற்சிக்கிறோம். முடியவில்லை. காரணம் நண்டு கதைபோல் நம்மிடை இருந்தே நம்மை கீழே இழுப்பது சூத்திரரிலும் தங்களை சற்சூத்திரர் என்று அடையாளமிட்டு கொள்வோர். நாம் சாதியத்தை அழிக்க ஒரு அடி முன் வைத்தால் அதை வலுக்கட்டாயமாக நிலைநிறுத்த இரண்டு அடி முன் வைக்க முயலுவோர் இத்தகையோரே. இவர்களுக்கு ஒத்தாசையாக பாடுபடுவோர் ஏற்கனவே தங்களை பிராமணர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டோர். பிராமணர் தங்களை தமிழர் என்று சொல்ல வெட்கப் படும்போது நாம் அவரை நம்மவர்களாக ஏன் கருத வேண்டும்?. அப்புறம் ஏன் அவர்களுடைய பேச்சுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்? ஆகையால் சாதி விசயத்தைப் பொருத்த மட்டில் பிராமணர் நமக்கு வழிகாட்டியல்ல என்பதை முதலில் நாம் அறிந்துக் கொண்டு செயல்படுவோம். தொடரும்.
தமிழரிடம் ஒரு சிறந்த குணம் உண்டு. அது கடவுள் நம்பிக்கை. தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. கடவுள் பெயரைச் சொல்லி நம்மவரை பாழுங்கிணற்றில் விழ சொன்னாலும் விழுவதற்கு இன்று வரை நம்மில் பலர் தயாராக உள்ளனர். இதுதான் நமக்குரிய சாபக்கேடு. அதைப் பயன்படுத்தி நம்மில் பலரை தஞ்சாவூர் பொம்மையாக்கி விட்டார்கள் ஆழ வந்தோர்.
எங்கிருந்து சாதியம் ஆரம்பித்தோமோ அங்கிருந்துதான் சாதியத்தைக் களைய முதல் அடி எடுத்து வைக்க வேண்டும். முள்ளை முள்ளால் எடுப்பது போல. இனி நாம் யாரையும் பயமுறுத்தி சாதியத்தைக் களைய முடியாது. இங்கு யாரும் எவருக்கும் பயந்தவர் அல்ல. அதனால் அடியாட்கள் கொண்டு பயமுறுத்தவோ அல்லது நேரிடையாக சற்சூத்திரிடம் மோதும் உக்தியோ இவ்விடத்தில் பயன்படாது. ஆனால் கடவுளைக் காட்டி அதர்மத்திர்க்கு ஆளாகாதே என்று சிவன் மீது ஆனையிட்டுச் சொன்னால் அவர் பயப்படுவார். முதல் நாள் பயப்படமாட்டார். ஆனால் அவருக்கு ஒரு துன்பம் வருமானால் அடுத்த நாளே சிவன் மீது ஆனையிட்டுச் சொன்னதால் வந்தது என்றெண்ணி பரிகாரம் தேட ஆரம்பித்து விடுவார். இதே தந்திரத்தைத்தான் ஆழ வந்தவரும் நம் மீது பயன்படுத்தினர். ஆரிய வேதத்தை மறுத்தால் கலி வாட்டும் என்று சொல்லி நம்மை பயமுறுத்தினர். நாம் பயந்தோம். அவர் கொண்டு வந்த வருணாசிரமத்திர்க்கு உடன்பட்டோம்.நம்மை சுலுவாக ஆட்கொண்டார்கள்.
அந்த பயம் கடவுளை நம்பும் நம்மில் பலரிடம் இன்றளவும் உள்ளது. அதனால் தொழில் பேதத்தால் இருந்த ஒரு மரபை நாம் சாதியமாக்கி வாழ வழி காட்டியது நம்மை ஆள வந்தோர்தான். இது நம்மை பிரித்தாள வழி வகுத்தது. அவர்களிடம் நாம் வசமாக மாட்டிக் கொண்டோம். வினையை வாங்கிக் கொண்டோம். இனி வினையைத் தீர்ப்பது எப்படி?
சாதியம் மனித நேயத்தை அழிக்கும் என்பதை ஏன் நம்மவர் ஏற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறனர்? அதற்கு பிராமணர் கொடுக்கும் தைரியம்தான் காரணம். அந்த தைரியம் வருவது இந்து தர்மம் எனும் உருவில். ஆக இந்து தருமப்படி ஒரு சற்சூத்திரர் இன்னொரு சூத்திரருக்கு எதிராக மனித நேயமற்று நடந்தால் அது பாவமாகாது என்று அவர்கள் கொடுக்கும் தயவில்தானே இவர்கள் அவ்வாறு செய்வது. இந்து தர்மத்தின்படி சாதியத்தைப் போற்றி தாங்கள் வாழ்வது தருமமே என்றெண்ணி அறியாமையில் வாழ்கிறார் நம் தமிழர். இந்த அறியாமையை நாம் நீக்க வேண்டும். சாதியம் போற்றுவது அதர்மம் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அறிவுடைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும்.
இந்த அறிவுடைய நிலைக்குக் கொண்டு வருவதர்க்கு நம்மிடம் இருக்கும் ஆயுதம் சைவ சமய கோட்பாடு மட்டுமே. தென்னாடுடைய தமிழர் சைவ சமய நெறியைய தொன்று தொட்டுப் பின்பற்றி வந்தவர். நம்முடைய சிவாகமங்களிலோ, திருமுறைகளிலோ, மெய்கண்ட சாத்திர நூல்களிலோ எங்காவது நமது சமயம் “இந்து மதம்” என்று குறித்துள்ளதா? இல்லையே. அப்புறம் ஏன் என் மதம் இந்து மதம் என்றும் நான் இந்து தர்மத்தைப் பின் பற்றுபவன் என்றும் நாம் கேனைத்தனமாகச் சொல்லித் திரிகின்றோம்.தமிழர் சமயம் சைவம் என்பதை ஆள வந்தோர் மறக்கடித்தனர். பின்னர் நமது பண்பாட்டை மறக்கடித்து ஆள வந்தோர் பண்பாட்டை நம் மீது திணித்தனர். இன்றும் திணித்துக் கொண்டே வருகின்றனர். நமது இறை நெறி அறியாமையால் ஆள வந்தோர் அவர்தம் இறை நெறியை நம்மீது திணித்து ஆண்டு வருகின்றனர். எத்தனை தமிழர் இன்று தங்களை சைவன் என்று சொல்லிக் கொள்ள முன் வருவர்? தனது சமயம் இன்னது என்று தெரிந்தும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூட அறிவற்றவர்களாக நாம் வாழ்கிறோம் என்றால் நாம் சாதியத்தை அழிப்பது எப்படி? முதலில் நமது சமயம் சைவம். நமது சைவ சமயம் சாதியத்தை ஏற்பது இல்லை. அவ்வாறு சாதியத்தைப் போற்றுவது அதர்மம். அதனால் கேடு விளையும் என்பதை நம் தமிழருக்கு முதலில் உணர்த்துங்கள். அப்புறம் சாதியம் தானாகவே நம்மை விட்டு அகலும். திருநீலகண்டம். இதற்கு முதல் அடி சாதியத்தால் பாதிக்கப் பட்டோர் இன்றும் பாதிப்படைவோர் தங்களை சைவன் என்றும் என் சமயம் சைவ சமயம் என்றும் கூற பழகிக் கொள்ளுங்கள். சைவர் பெரும்பான்மையோர் என்றால் சற்சூத்திரர் சிறுபான்மையாகி தானாக உண்மையான சைவ நெறிக்கு வந்து விடுவர். அடுத்து அன்பால் எப்படி நம் தமிழரிடம் இருக்கும் சாதியப் பற்றை நீக்கலாம் என்பதை நேரமிருந்தால் இன்னொரு நாள் அறிவோம். சிவ சிவ.
ஒ சின்ன பையனே. தமிழரின் குலம் கோத்திரம் கூட அறியாதவனா நீர்? உண்மைதான் உமக்கு எங்கே இதைப் பற்றி எல்லாம் தெரியப் போகிறது.நீர் முதலில் தமிழர் பற்றிய வரலாறை படித்த பின்பு எழுதவும். தமிழர் வழி படுவது சிவனை மட்டும் அல்ல . யாம் பல முறை கூறிய பின்பும் எம்மை தெலுங்கர் என்று எழுதும் பிண்டமே . தயவு செய்து சக இனத்தவரை கேவலம் செய்யாதே. உன்னால் நம் தமிழ் இனமும் தலை குனிய நேரிடுகிறது.
நமசிவாய வடவன் சொல் என்று ஒத்துகொள்ள என் இவ்வளவு தயக்கம் அல்லது பதில் கூறாமல் திசை திருப்பினால் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையோ ?
நமசிவய என்ற சொல்லுக்கு பதில் சிவ சிவ என்று சொன்னால் இன்னும் அழகு என்று இந்த “பேர் அறிஞர்களுக்கு ” என் தெரியவில்லை ? சிவ சிவ என்று பல முறை சொல்லிபாரும் பிறகு புரியும் அதன் பயன் மற்றும் தமிழின் இனிமை .
எதற்கு தேவை இல்லாமல் இந்து சமயம் , இந்து தர்மம் அது இது என்று கிறுக்கி தள்ளவேண்டும் ?
திசை திருப்பி 1000 பக்கங்கள் எழுதினாலும் உபயோகமில்லை . சுற்றி வளைத்து தேவை இல்லாததை எழுதுவது ஏன்?
இதன் மூலம் தெரிகிறது இந்த பேர் அறிஞர்களின் தமிழ் பற்று .
முதலில் தமிழில் வழிபட பழகிகொல்லவும், அறிவுரை கூறுவதை விட்டு விட்டு தமிழனாக வாழ கற்றுக்கொள்ளவும்.
எனக்கு குலமும் கிடையாது , கோத்திரமும் கிடையாது முண்டமே . நீ எனக்கு பாடம் நடத்தாதே . என் கிட்ட கோத்திரமும் குலமும் பத்தி பேசாதே வடுக நா……. இப்படி பேசி பேசித்தான் தமிழர்களுக்குள் ஜாதிய வளர்த்த .. தமிழர்களின் முதுகில் ஏறி சவாரி பண்ணிக்கிட்டு அவனையே அடிமையாக்க நினைக்கிற ஒரு வடுக இனம் நீ இனம் ஒற்றுமையை பத்தி பேசுற ? தமிழன் தான் எனக்கு குரூவா இருக்க முடியும் , உன்னை மாதிரி தெலுங்க மன்னனாக இருக்கமுடியாது.
சிவ சிவ
சாதியத்தை அழிக்க வழி சொல்லுங்கன்னா சைவத்தை குலைக்க வழிதேடுவதைப் பார்த்தால் அன்னாச்சியின் மனதில் சிவன் இன்னும் குடிகொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.
நமசிவய என்பது தூல பஞ்சாட்சர மந்திரம். சிவனடியார் சமய தீட்சைப் பெற்று உலக இன்பங்களை நோக்கி வாழும் பொழுது உச்சரிக்க வேண்டிய மந்திரம். சிவயநம என்பது சூக்கும பஞ்சாட்சர மந்திரம். முறைப்படி விசேட சிவ தீட்சைப் பெற்று ஆன்மார்த்த பூசையில் சிவனை வழிபடுவோரும், கிரியையில் நிற்போரும், உள்ளம் உலகியல் இன்பத்தை விட்டு நீங்கி வீடு பேரின்பத்தை நோக்கிச் செல்வோரே அச்சூக்கும மந்திரத்தை உச்சரிக்க வல்லவர். பஞ்சாட்சர மந்திரத்தைப் பொருள் அறிந்து உச்சரிக்க வேண்டும். அவரவர் விருப்பு வெறுப்புக் கொண்டு உச்சரிப்பது அல்ல.
நமசிவய வடசொல். சிவயநம தமிழ் சொல். அதனால் நாம் தமிழர் சிவயநம என்று உச்சரிப்பது மேல் என்று சொல்வதெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகும். கறிக்கு உதவாது.
ந – நடைப்பாற்றல் (உலகியல் இன்பம்)
ம – மறைப்பாற்றல் (ஆணவமல மறைப்பால் உயிருக்கு ஏற்படும்
அறியாமை)
சி – சிவன் (இறைவன்)
வ – வனப்பாகிய சிவனின் திருவருள் (சத்தி)
ய – உயிர்
மேலே காட்டப் படுவது “ய” – வாகிய உயிர் உலகியல் இன்பத்தை நோக்கி நிற்பது. தூல மந்திரம்
சி – சிவன்
வ – சத்தி
ய – உயிர்
ந – நடைப்பாற்றல்
ம – மறைப்பாற்றல் (மலம்)
மேலே காட்டப் படுவது “ய” – வாகிய உயிர் உலகியல் இன்பத்தை விட்டு நீங்கி மல நீக்கம் பெற்று சத்தியாகிய திருவருளின் துணை கொண்டு சிவனை அடைவது (வீடு பேரின்பம்). சூக்கும மந்திரம்.
இப்படி நமசிவய என்பதற்கும் சிவயநம என்பதற்கும் பொருள் உணர்த்துவது தமிழர் கண்டு கொண்ட சித்தாந்த சைவ நெறி.
மேற்கூறியவாறு இல்லாமல் நம + சிவய என்பதற்கு நீங்கள் கொள்ளும் பொருள் நம = நமஸ்காரம்; சிவய = சிவனுக்கு; சிவனுக்கு நமஸ்காரம் என்பதல்ல. அவ்வாறு பொருள் கொள்வது வடவர் வழக்கம் என்றால் அதனையே சட்டமாக்கி அது வடச்சொல் என்பது, மிகவும் பண்பாகச் சொன்னால், திராவிட நாத்திகர் சைவ சமயதிற்கு கற்பிக்கும் களங்கமாகும்.
சேக்கிழார் பெரிய புராணத்தில்,
ஆதி மந்திரம் அஞ்செழுத்
தோதுவார் நோக்கும்
மாதி ரத்தினும் மற்றைமந்
திரவிதி வருமே
……. (12:28:698)
பொருள்: ஆதி மந்திரமான திருவைந்தெழுத்தை ஓதுகின்றவர்கள், நோக்கும் திசையிலும், மற்ற மந்திரச் செயல்கள் சென்று சேருமோ? சேரா.
பஞ்சாட்சர மந்திரத்திர்க்கு நிகர் வேறு மந்திரமில்லை என்று சொன்னது 12-ம் நூற்றாண்டில். அது ஆதி மந்திரம் என்று சொன்னது ஆதி அந்தமிலாத சிவனை அடையவிக்கும் மந்திரம் என்பதாகும். இதில் பஞ்சாட்சர மந்திரத்தை வடச்சொல் என்பதற்கு இடமேது?
5-ம் நூற்றாண்டு காலத்தவராக கருதப் படும் திருமூலர் (3-ம் நூற்றாண்டு காலத்தவர் என்று கூறும் சைவ சமய வரலாற்று ஆசிரியரும் உளர்), “நமசிவய” என்ற வார்த்தை “ஞானத்தைத் தரும் மறைமொழி” என்று சொன்னது குறைந்த பட்சம் 1,500 ஆண்டுகளுக்கு முன்பு.
ஒன்றுகண் டீர்உல குக்கொரு தெய்வமும்
ஒன்றுகண் டீர்உல குக்குயி ராவது
நன்றுகண் டீர்இனி நமச்சிவா யப்பழம்
தின்றுகண் டேற்கிது தித்தித்த வாறே . (10:9:5 – பாடல் 1)
தமிழாகமத்தில் 1,500 ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட இச்சொல் தமிழ் சொல் இல்லை என்பது தற்குரித்தனமாகும். “சிவனுக்கு வணக்கம்” என்பதற்கும் உயிருக்கு அறியாமையை நீக்கி சத்தாகிய சிவத்திடம் சேர்க்கும் சத்திமிக்க மந்திரம் என்று உணர்த்தி அதன் ஒவ்வொரு சொல்லுக்கும் தமிழில் பொருள் கூறுவது தமிழர் மொழியே என்பதை அறியவேண்டியவர் அறியட்டும்.
“ஏதும் ஒன்றும் அறிவிலார் ஆயினும்
ஓதி அஞ்செழுத்தும் உணர்வார்கட்கும்
பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே
மாதும் தாமும் மகிழ்வார் மாற்பேறரே”
– அப்பர்.
சிவ சிவ.
tamil tamilan. சிறு குழந்தைகளுக்கும் புரிந்துருக்கும் . இவ்வளவு விளக்கம் கொடுத்தும் உங்களுக்கு புரியலைனா!!!!??
சின்ன பையனே. உண்மையை பேசினால் உம்மை போன்றோர் ஏற்றுக்க கொள்ளாதது இயல்பே. உம்மை சொல்லி குற்றமில்லை. உன் வ்திபயன் அப்படி. (ஆசிரியரே இதையாவது பிரசுரப்பிரா )
மன்னா, ஒரு வேலை சின்ன பையன் இந்துவா இருக்க லாகாது
அவனிடம் பேசி பயனில்லை.
உண்மைதான் கும்கி.
வந்தேறிகளால் உருவாக்கபட்ட சாதியத்தால் தமிழினம் அழிந்தது !!
தமிழர்களே இந்த காணொளியை பாருங்கள் …
https://www.facebook.com/NTSKT1/videos/636143553219291/
சும்மா காணொளியை பார் என்பதை விடுத்து , தமிழினம் இன்னும் அழியாமல் தான் உள்ளது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்தே உள்ளது தமிழினம். தற்போது சில தமிழ் இன வெறியர்களால் நமது தமிழுக்கு களங்கம் ஏற்பட்டு விடுமோ .
கண்டிப்பா தமிழ் இனம் அழியாது . ஆனால் குலம் பேசுபவனும் கலப்பு தமிழனும் இருந்தா கொஞ்சம் யோசிக்கணும்…
ஆமாம். சின்னப் புத்திக்காரன் சொல்லி விட்டார் .
காணொளியை பாருன்னு சொல்றாரு . முடிஞ்சா பாரு இல்லைனா மூ.. கிட்டு இரு . நீ தான் திருட்டு திரவிட மன்னன் ஆச்சே . வேற மாதிரி காணொளி நீ பார்ப்ப …. தமிழ் மீது பற்று இருந்தால் இனவெறி சொல்றவன் வடுகன்கல் தெலுங்கு இனவெறியர்களா இருக்காங்களே .தெலுங்க மன்னனுக்கு தெரியாமலா இருக்கும் ?
“பேர் அறிஞரின் ” கருத்து குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல் உள்ளது.
இவர் சொல்லுவதை பார்த்தல் தமிழர் சமயம் (சிவ வழிபாடு ) ஆரியன் வருகைக்கு பின் தான் தொடங்கியது போல் அல்லவா உள்ளது !
1ஆம் நூற்றாண்டுக்கு பிறகு தான் சிவா வழிபாடு தொடங்கியதா ? சமய குரவர்கள் பாடிய பாடல்கள் அனைத்தும் தமிழிலா ? சிறிது கூட வடமொழி கலப்பில்லை ?
ஒரு சொல் புழக்கத்தில் உலா வந்த பிறகு அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுவது எவ்வாறு ஏற்புடையது ஆகும் ? நமசிவாய என்னும் சொல்லிற்கு மேற்கூற பட்ட விளக்கம் அவ்வாறே . அதை வைத்து அது தூய தமிழ் சொல் என்பது அறியாமை .
சிவ வழிப்பாடு வெறும் 1500 ஆண்டு பழமையானதா ? தர்க்கம் வேற்று உண்மையை மறைத்து பேசுவது வேறு .
தூய தமிழ் சொல்லான சிவ சிவ எனும் அற்புத சொல்லுக்கு பார்பன மொழி சேர்த்து உருவாக்க பட்ட சொல் தான் நமசிவாய , இதை நம்மிடையே தமிழ் சொல்லென்று பரப்புரை செய்ய பட்டு வந்துள்ளது . சிவபுராணத்தில் ஓர் இடத்தில ” ஆரியனே” என்று வரும் சொல் எதை குறிக்கிறதோ ? சமய குரவர்கள் பாடிய பாடல்களில் இன்னும் பல வடமொழி வார்த்தைகள் இங்கு கூற இயலும் .
தமிழர் சமயம் ஆரியன் வருகைக்கு முன்பே மிக சிறப்பாக புழக்கத்தில் இருந்ததை அறிஞர் அறியார் ?
நம்மிடையே உள்ள பெரிய குறை நமது சமயத்தை நாம் அறியவில்லை. அதன் உட்பொருளை நாம் அறியவில்லை. தமிழ் மொழியை நாம் முழுமையாக உட்வாங்கவில்லை. அப்புறம் எப்படி உண்மையை அறிய முடியும்? ஒன்றை ஆதார பூர்வமாக சொல்வதற்கு அதன் மூலத்தைக் குறிப்பிட வேண்டுமல்லவா? அவ்வாறு குறிப்பிடுவதர்க்கு நம்மிடம் தமிழில் இருக்கும் எழுத்துப் பூர்வமான ஆதாரம் திருமந்திரம். அதனால்தான் அதனைக் குறிப்பிட்டேன். இவ்வாறு குறிப்பிட்டதர்க்கு சைவ சமயம் 1,500 ஆண்டுகளுக்கு உட்பட்டது என்று ஆகி விடாது. அதன் தொன்மையை விளக்கிட மொஹாஞ்டாரோ மற்றும் ஹரப்பா அகழ்வாராய்ச்சிகள் நம்மை திருவள்ளுவர் ஆண்டுக்கு முன் 5,000 ஆண்டுகளுக்கு இட்டுச் செல்லும். இது சைவத்தின் தொன்மையை குறித்தது.
வடமொழி என்பது தமிழ் மொழி கலந்தது என்பதை அறிய பாவாணரின் நூலை படியுங்கள். 7-ம் நூற்றாண்டில் தமிழில் வடமொழி கலப்பு வந்து விட்டது. இனக் குழுக்கள் கலப்பினால் அது எல்லா மொழிகளுக்கும் ஏற்படுவது இயல்பே. அதுபோலவே நமது தமிழில் இருந்த வார்த்தைகளும் வடமொழியில் எடுத்து ஆளப்பட்டது.
தமிழ், தமிழன் என்று ஒருவன் பிறந்த பிறகுதான் அவனுக்கு ஓர் உருவம், ஓர் அடையாளம், ஒரு பெயர், அவனுடைய பண்புகள் இன்னவென்று என்று அனைத்தையும் விளக்கிச் சொல்ல முடியும். அதுபோல ஒரு சொல் புழக்கத்தில் உலா வந்த பிறகுதான் அந்த வார்த்தைக்குப் பொருள் சொல்ல முடியும். நீங்கள் உபயோகித்த “அர்த்தம்” என்ற வார்த்தையே வடமொழிச் சொல்தான். இதனையும் அறியாது அச்சொல்லை உபயோகிப்பதில் இருந்து தங்களின் தமிழ் புலமை நன்றாக விளங்குகின்றது!
“ஆரியன்” என்பது ஒரு பொருள் கொண்ட சொல் அல்ல என்பதை அறிவுடையோர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். “ஆரியன்” என்பது “அறியன்” என்ற தூய தமிழ் சொல்லின் திரிபு. அதன் பொருள் “அறிவுடையோன்” என்பதாகும். சிவ பெருமான் முற்றறிவாளன். இதன் பொருள் எக்காலத்திலும், முக்காலத்தையும் அறிந்தவன் என்பதாகும். அவனுக்கு மேல் அறிவிக்க ஒருவன் இல்லை என்பதை அறிவுறுத்தவே சிவபுராணத்தில் சிவனின் அநாதி பழமையைக் குறிப்பிட மணிவாசகர் அவ்வார்த்தையைக் கையாண்டார். இதனையும் அறியாமல் நால்வர் பெருமக்களை குறை சொல்வது, சிற்றறிவுடைய தன் குறையை மறந்த மகானின் செயலாக உள்ளது.
நமசிவய – தூல மந்திரம்
சிவயநம – சூக்கும மந்திரம்
சிவ – அதிசூக்கும பஞ்சாட்சரம்
சி – மகா காரண பஞ்சாட்சரம்
மேற்கூறப்பட்டது உயிரானது மும்மலங்களை விட்டு நீங்கி சிவனின் திருவருளுடன் (சத்தி) கூடிய பிறகு அதன் கருவிக் கரணங்கள் பசு கரணமாக இல்லாமல் பதிகரனமாகி செயல்படும் இந்நிலையில் “சிவ” என்று உச்சரிக்க வேண்டும். சத்தியுடன் கூடிய உயிர் அதனிலும் மேலாகிய சிவத்துடன் சார்ந்து நிற்கும் நிலையில் அவ்வுயிர் சதா சிவத்தைச் சிந்தித்து “சி” என்ற மகா காரண பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்த வண்ணமாக இருக்கும். இதையெல்லாம் எம்மை இங்கு பதிவிட்டு நம் மக்களுக்கு கொஞ்சம் சைவ சமய அறிவை போதிக்க வைத்த தமிழ், தமிழனுக்கு நன்றி. இதை விடுத்து கட்டுரைக்குச் சம்பந்தமாக ஏதும் ஆக்ககரமான விளக்கங்கள் இருந்தால் பதிவு செய்யுங்களேன்.