சமூக சேவைகள் செய்யவும், மக்களுக்கு சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ”மக்கள் பாதை” என்ற பெயரில் இயக்கம் தொடங்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை மாலை நடந்த நிகழ்ச்சியில் இந்த இயக்கத்தை உ.சகாயம் ஐ.ஏ.எஸ் திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார்.
நான் இன்று முதல் தனிமனித ஒழுக்கத்தை கடை பிடிப்பேன்.
எந்த ஒரு சூழ்நிலையிலும் லஞ்சம் கொடுக்கவோ, வாங்கவோ மாட்டேன்.
ஊழலுக்கு துணை போக மாட்டேன்.
சட்ட திட்டங்களை மதித்து நடப்பேன்.
தாய் தந்தையர்களை மதிப்பேன்.
இயற்கை வளங்களை பாதுகாப்பேன்.
முடிந்தவரை ஏழைகளுக்கு உதவி செய்வேன்.
விவசாயத்திற்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் பாடுபடுவேன்.
நெசவு மற்றும் குடிசை தொழிலை பேணி காப்பேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனிற்காக பாடுபடுவேன்.
மாற்று திறனாளிகளுக்கு உதவி செய்வேன்.
ஜாதி மத பேதமின்றி ஒற்றுமையுடன் இருப்பேன் என நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
-http://www.nakkheeran.in