பயங்கரவாதிக்கு சீனா “ஆதரவு” இந்தியா மீதான விரோதத்தால் முட்டுக்கட்டை

aiaiஐ.நா: பதன்கோட் விமானதளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவித்து, அவனுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவான தனது நிலையை சீனா மீண்டும் அரங்கேற்றியுள்ளது. இவ்வாறு தடை விதிக்க, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் நிர்ணயித்துள்ள விதிமுறைகள் இடம் தர வில்லை என்றும் சீனா சப்பைக்கட்டு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இயங்கிவரும் ஜெய்ஷ்- இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான மசூத் அசார் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்ற இந்தியாவின் முயற்சிக்கு, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் ஆதரவு அளித்தன. ஆனால் சீனா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதை தடுத்து விட்டது.
பதன்கோட் விமானதள தாக்குதலின் மூளையாக செயல்பட்ட மசூத் அசார், பயங்கரவாதிஎன அறிவிப்பதற்கான “தகுதி”களைப் பெறவில்லை என்பது சீனாவின் வாதம். தனது இந்த விதண்டாவாதத்தை மற்ற உறுப்பு நாடுகளும் ஆதரிக்க வேண்டும் என்றும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2001ம் ஆண்டே இந்த இயக்கம், அல் கொய்தா இயக்கத்துட்ன தொடர்புள்ளது என கூறி, ஐ.நா.வின் பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அதன் தலைவர் மீதான தடை விதிப்பு முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பது ஏமாற்றம் தருகிறது என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

 

இவ்வாறு இந்திய விரோதப் போக்கை சீனா கடைப்பிடிப்பது இது முதல் தடவை அல்ல. மும்பை தாக்குதலுக்கு காரணமான ஜக்கி-உர்-ரஹ்மான் லக்வியை விடுதலை செய்த பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா.,விடம் இந்தியா கோரிக்கை வைத்தபோது, அதையும் சீனா தடுத்துள்ளது. சீனாவின் இந்த இந்திய விரோத போக்கை கண்டிக்கும் வகையில் சீனப் பொருட்களை நமது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று குரல் எழுப்பப்பட்டுள்ளது.

-http://www.dinamalar.com

TAGS: