அதிமுக வேட்பாளர் பட்டியல்: அதிர்ச்சியும்… அதிருப்தியும்

jeya_admk_001தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல்களம் நோக்கிய அரசியல் கட்சிகளின் செயல்பாடு சூடுபிடித்திருக்கிறது.

வழக்கமான இருதுருவங்களான அதிமுகவும், திமுகவும் மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் முயற்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருவது சமீபகாலமாகவே ஊடகங்களில் ஒரு பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்வதற்கு முன்பே திமுகவில் வேட்பாளர் நேர்கணல் நடந்தது.

அதிமுகவில் வேட்பாளர் நேர்காணல் நடந்தது ஊடகங்களில் வெளிவராத ரகசியமாக இருந்தது. ஆனால், திடீரென இன்று மதியம் வெட்பாளர் பட்டியலை முதல் கட்சியாக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 227 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் கேரளாவில் 7 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பெயர்களை அறிவித்துள்ளது.

வேட்பாளர் பட்டியலின் சில குறிப்புகள்

முதல்வர் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அமைச்சர்கள் பத்து பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

ஜெயலலிதாவுக்கு அடுத்து கட்சியின் முக்கிய தலைவராக அடையாளம் காட்டப்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம் சமீபகாலமாக தலைமையால் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.

அதனால், வெளிவரும் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் விடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் போடியில் போட்டியிடுகிறார்.

அதிமுகவுடன் சுமூகமாக இருந்துவந்த நடிகர் சரத்குமார் சமீபத்தில் முரண்பட்டு கட்சியிலிருந்து விலகினார்.

ஆனால், சற்றும் எதிர்பார்க்காத வகையில், மீண்டும் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுடன் இணைந்தார். வெளியான வேட்பாளர் பட்டியலின்படி திருச்செந்தூரில் போட்டியிடுகிறார்.

அதிமுகவிற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் திரையுலக நடிகர் நடிகைகளில் பலர் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதிமுகவின் பட்டியலில் 31 பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூட்டணிகட்சிகளுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பட்டியலின் விளைவுகள்

அதிமுகவை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தல் என்றால் தைரியமாக தனித்துப் போட்டியிடுவதும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு அதிக கவனம் செலுத்துவதும் வழக்கம்.

சட்டமன்ற தேர்தலில் அதிக முன் எச்சரிக்கைக்கு காரணம் முதல்வர் பதவியை விட்டுவிடக் கூடாது என்ற அக்கறைதான். ஆனால், இந்தமுறை அதிமுக தனித்தே களம் இறங்குகிறது.

ஓ.பி.எஸ். மற்றும் அவருடைய ஆதரவாளர்களால் கட்சி பிரிய நேரலாம் அல்லது தேர்தல் பணியில் அவர்கள் சொதப்பலாம் என்ற கணிப்பை, ஓ.பி.எஸ்ஸுக்கு தொகுதி வழங்கியதன் மூலம் உடைத்துள்ளார்.

வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதன் மூலம் அதிமுக கூட்டணிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

-http://www.newindianews.com

TAGS: