61 முறை இடிந்த சென்னை விமான நிலைய மேற்கூரை- விளக்கம் கேட்கும் மனித உரிமைகள் ஆணையம்

chennai-airport-600சென்னை: சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் தொடர்ச்சியாக மேற்கூரை மற்றும் கண்ணாடிக் கதவுகள் உடையும் சம்பவங்கள் தொடர்கதையாகியுள்ள நிலையில் இது தொடர்பாக விமான போக்குவரத்து துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுவரையில் 61 முறையாக கண்ணாடி மற்றும் மேற்கூரை உடைந்து விபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது. சென்னை விமான நிலையத்தின் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்கள் ரூ.2,200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

NHC notice about Chennai airport roof fall issue பயன்பாட்டுக்கு வந்த 3 ஆண்டுகளில் தொடர்ச்சியாக கண்ணாடி சுவர்கள் உடைந்து விழுவது, கதவுகள் உடைந்து நொறுங்குவது, மேற்கூரை உடைந்து விழுவது, சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள சலவை கற்கள் பெயர்ந்து விழுவது என விபத்து நடந்து வருகிறது.

இதுவரையில் 61 விபத்துக்கள் நடந்துள்ளது. 11க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் 61 முறை மேற்கூரை இடிந்து விழுந்தும் கூட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேள்வி எழுப்பி நோட்டீஸ் விடுத்துள்ளது. கண் கெட்ட பிறகு ஹ்ம்ம்ம்….

tamil.oneindia.com

TAGS: