அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் குறித்த புகார்கள் கமிஷனர் அலுவலகத்தில் குவிந்து வருவதாகக் கூறுகின்றனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல்துறை அறிவித்திருந்தது.
இதற்காக தனிப்படைகளும் போலீஸ் சார்பில் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் தியேட்டர்கள் அதிக கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள், சென்னை காவல் துறையை 044-23452359 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டது. தற்போது அதிகக் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனவாம்.
பொதுமக்கள் அளிக்கும் புகார்களில் ‘சினிமா தியேட்டர்களில் கட்டண விவரத்தை வெளிப்படையாக எழுதிவைக்க வேண்டும். ஏ.சி. வசதி உள்ள தியேட்டர்களில் கண்டிப்பாக ஏ.சி. பயன்படுத்த வேண்டும். ‘பிளாக்’கில் டிக்கெட் விற்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்பது போன்ற கோரிக்கைகளுக்கும் பஞ்சமில்லையாம்.
மேலும் கமிஷனர் அலுவலகத்தில் நேரடியாக வந்தும் பொதுமக்கள் புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளதாக, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் போலீஸ் சார்பில் இதுதொடர்பான அதிரடி நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆமாம் இப்ப நாடு இருக்கிற நிலமயில தமிழக மக்களுக்கு சினிமாதான் ரொம்ம்ப்ப்ப முக்கியம் ! சினிமா மோகவலையில் சிக்கவச்சே ஏழைகள்கிட்டே இருக்கும் கொஞ்ச நஞ்சத்தையும் பிடுங்கி சொகுசு வாழ்க்கை வாழுங்க, வரின்ற பேரிலே உங்க கிட்டேயிருந்து பிடுங்கி அரசாங்கம் வாழட்டும், அப்புறம் ஏழைத்தமிழன் அஞ்சுக்கும், பத்துக்கும், ஆக்கிச் சாப்பிடும் அரிசிக்கும் கையேந்தி அரசியல் கூட்டங்களில் சிக்கி நசுங்கி சாகட்டும்.
தமிழகத்தில் சினிமா தடைசெய்யப்பட்டால் அங்கே பெரும்பாலான மக்களின் வாழ்வும், பொருளாதாரமும் மேம்படும் என்று அவதானிக்கிறேன்.
சரி சரி மன கவலை மறந்து சற்று நேரம் நகைசுவை காட்சிகளை பார்த்து மகிழுங்க ..
https://www.facebook.com/482323161950591/videos/519365241579716/
கண்டி நாயக்கர் – தமிழ்தேசிய எழுச்சி ஆவணப்படம்.
மிக்க நன்றி, தமிழ் எழுச்சி பறை. ”கண்டி நாயக்கர் – தமிழ்தேசிய எழுச்சி ஆவணப்படம்”. அறிமுகப்படத்தியதற்கு.
நன்றி உழவர் ..
அறியாமையில் அந்நியனின் சூழ்சி அரசியலில் அவதியுறும் தமிழினம் எழுச்சிகொள்ள வேண்டும் ..
முடிந்தளவு பகிருங்கள் ..இந்த ஆவணப்படம் இலட்சகணக்கான தமிழர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டியது ஒவ்வொரு தமிழரின் பொறுப்பு ..