நாம் தமிழர் ஆட்சிக்கு வந்து, தான் முதல்வரானால் மாநில தலைநகரை மாற்றுவது உள்ளிட்ட பல மாற்றங்களை தமிழகத்தில் கொண்டு வருவதாக கோவையில் நடந்த கூட்டத்தில் சீமான் பேசினார்.
கோவையில் பிரசாரம் செய்துவரும் சீமான் தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், கோவை தெற்கு தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
அப்போது, “நாங்கள் தேர்தலில் நிற்கவில்லை. ஓட்டு கேட்டு வரவில்லை. 4 ஆண்டுகள் படித்தோம். இப்போது தேர்வுக்கு நிற்கிறோம்.
நாங்கள் ஓட்டு கேட்டு வரலை. எதிர்கால தமிழர்களின் வாழ்க்கையை கேட்டு வருகிறோம்.
நாங்கள் குறை கேட்க வரவில்லை. குறை தீர்க்க வந்திருக்கிறோம்.
பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்டு விட்டு, இப்போது என்ன பிரச்சினை என மு.க.ஸ்டாலின் கேட்கிறார். இவ்வளவு நாள் மக்களுக்கு என்ன பிரச்சினை என்பதே தெரியாமல்தான் ஆட்சி செய்து வந்தார்களா?
கடந்த கால தவறுகளுக்கு மன்னித்துக் கொள்ளுங்கள் என்கிறார் ஸ்டாலின். நாமும், ‘உங்களுக்கு கடந்த காலங்களில் வாக்களித்து ஆட்சிக்கு வர வைத்த எங்களின் கடந்த கால தவறுகளுக்கு மன்னித்துக் கொளுங்கள்’ என கேட்டுக்கொள்ளலாம்.
புதியதாக அரசியலுக்கு வந்தது போல், நாங்கள் வந்தால் அதை செய்வோம். இதை செய்வோம் என்கிறார்கள். ஏன் ஆட்சியில் இருந்த போது செய்யவில்லை.
அத்தியாவசிய உணவு தேவையை கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலையில் தமிழக மக்கள் உள்ளனர்.
ஜெயலலிதா காலில் விழுந்தால் பரவாயில்லை. கார் டயரில் விழுவதை என்னவென சொல்வது?
ஹெலிகாப்டரை கும்பிட்டாலும் பரவாயில்லை. ஹெலிகாப்டர் நிழலை பார்த்து கும்பிடுகிறான்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வேன் என்கிறார் கலைஞர். விவசாயியை கடனாளியாக்கியது யார் என்றால் பதிலில்லை.
கல்வி கடன் ரத்து செய்வோம் என்கிறார். கடன் வாங்கி கற்கும் சூழலை ஏற்படுத்தியது யார் என்றால் அதற்கும் பதிலில்லை.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, தாய் போல இந்த நாட்டை ஆண்டேன் என்கிறார். எந்த தாய் டாஸ்மாக்கை திறந்து வைத்து, மகன்களை குடி எனச்சொல்வார் ?
இந்த தேர்தலில் ஊழல், லஞ்சம், மது மூன்றும்தான் பிரச்சினையாக உள்ளது. இந்த மூன்றையும் கொண்டு வந்தது யார்?
நாங்கள் ஆட்சி க்கு வந்தால் மதுக்கடைகளை மூடுவேன் என்கிறார் கலைஞர்.
படிப்படியாக மூடுவேன் என ஜெயலலிதா சொல்கிறார்.
முதலில் உங்கள் சாராய ஆலைகளை மூடுங்கள்.
நாட்டை ஆளும் ஜெயலலிதாவுக்கு, ஆண்ட கருணாநிதிக்கு, ஆள நினைக்கும் விஜயகாந்துக்கு என்ன பொருளாதார கொள்கை இருக்கிறது.
94 வயதில் ஒருவரும் 70 வயதில் இன்னொருவரும் தமிழகத்தை இன்னுமொரு முறை ஆள துடிக்கிறார்கள்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தையே மாற்றுவோம்.
தமிழகத்தின் தலைநகர் இனி சென்னை இல்லை.
நிர்வாக வசதிகளுக்காகவும், வளர்ச்சியை பரவலாக்கவுமே 5 தலைநகர்.
கணினி, துறைமுகத்துக்கு சென்னை தலைநகர்.
தொழில், வர்த்தக தலைநகராக கோவை இருக்கும்.
மதுரை மொழி, கலை பண்பாடுக்கான தலைநகர்,
திருச்சி நிர்வாகத்துக்கான தலைநகர் என மொத்தம் 5 தலைநகரை அமைப்போம்.
-http://www.tamilwin.com
வெற்றி நமதே ,வாழ்க சீமான் ,வளர்க தமிழ் .
ஆட்டக்காரி அலமேலு ..
https://www.facebook.com/photo.php?fbid=1141069862610297&set=a.228325797218046.75374.100001218815012&type=3&theater
தமிழ் நாட்டு தமிழனுக்கு வந்தவனுங்க கொடுக்கிற சோதனையே பாத்திங்களா?
அதுக்குதான் தமிழ் நாட்டை தமிழன் ஆளனும்! இதுக்கு மேலேயும் அறிவு வரலானா…கார் டயரையும்,ஹெலிகாப்ட்டர் நிழலையும் கும்மிட வேண்டியதுதான்!!!
5வது தலைநகர் “திரிகோணமலை”
– ஈழ தமிழர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு !
தமிழ் நாட்டை ( தமிழ் நாடு என்பதே ஒரு ஏமாற்று வேலை ) ஆள யாராலும் முடியாது . ஏன் என்றால் மகா அறிவாளிகள் வாழும் ஒரு இடம் தான் தமிழ் நாடு. அளவுக்கு அதிகமான மூளை வளர்ச்சியால் அந்த மூளை இவனுங்க காது வழியாகவும் ,மூக்கு வழியாகவும் வழிந்தோடுகிறது. இப்படிப்பட்ட மகா குடிகாரனுங்கள மன்னிக்கவும் இப்படிப்பட்ட மகா அறிவாளிகளை ஆள , ஒன்று கருனாநீதி பேய் அல்லது ஜெயலலிதா என்ற பிசாசு வால் மட்டுமே ஆளமுடியும் . மற்றவர்கள் வீட்டுக்கு போகலாம் .
5வது தலைநகர் “திரிகோணமலை” சரியான தேர்வு!
6 ஆவது தலைநகரம் யாழ்.தமிழ் நாட்டுத் தமிழன் தன்மானத்தோடு வாழ.
அது சரி சீமானே ! ஐந்து தலை நகரில் உங்கள் முதலமைச்சர் அலுவலகம் எந்த நகரில் இயங்க போகிறது ? இப்படித்தான் சிலம்பு செல்வர் மா. பொ.சி (சிவஞானம் ) என்ற தமிழறிஞர் ஒருவர் இருந்தார். தமிழ், தமிழினம், இழந்த தமிழ் பேரரசை மீண்டும் மீட்போம் என்று முழங்கினார் . பிறகு என்னடாவென்றால் தி.மு.க, அ.தி.மு.க எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ; கொடி போட்ட காரிலேயே பவனி வந்தார். ஒரு கால் நீங்களும் வருங்கால மா. பொ.சி யாக அவதாரம் எடுக்கலாம்.
சீமானுக்கு வாக்கு சேகரித்தார் சீக்கிய சிங்கம் ஐயா ஜக்மோகன் சிங் அவர்கள் தமிழக அரசியல் வரலாற்றில் தமிழனுக்கு சீக்கியர் வாக்கு சேகரிப்பது இதுவே முதல்முறைhttps://www.facebook.com/100010579988348/videos/227232794306052/
பஞ்சாபியும் தமிழர்களும் ஒரு தாய் பிள்ளைகளாக களமாடுவோம்…
பேராசியர் ஜக்மோகன் சிங்….
மலையாளி பேராசியர் சுரேஸ்.
கன்னடர் சமுக சிந்தணையாளர் சுபாஸ்..
செந்தமிழன் சீமானுக்கு வாக்கு கேட்டார்கள்.
#வாக்களிப்போம்_இரட்டை_மெழுகுவர்த்தி!!
#நாமே_மாற்று_நாம்_தமிழரே_மாற்று!!
#நாம்_தமிழர்!!!
ஒரு தலைநகரை (சென்னை) கொண்டு தமிழகத்தை வளர்ச்சியடைய வாய்ப்பில்லை என்ற சீமானின் அறிய கண்டுபிடிப்பால், சீமான் நிர்வாக வசதிகளுக்காகவும், வளர்ச்சியை பரவலாக்கவுமே 5 தலைநகர் உருவாக்குவதைவிட தமிழகத்தை 5 மாநிலமாக பிரித்தால் அதிவேக வளர்ச்சியை அடையலாமே !
கன்னட மாநிலத்திலிருந்து கன்னட கல்வியாளர் தமிழகத்தை தமிழன் ஆண்டால் இந்தியாவுக்கே சிறந்தது என்றும் சீமானுக்கு ஒட்டு போட்டு உங்கள் சந்ததிகள் வளமாக வாழ வளிசெயுங்கள் என்கிறார் ..
இதேபோல் கேரளாவிலிருந்தும் சமுக ஆர்வலர்கள் சீமானுக்காக தமிழகமெங்கும் …பல தேசிய இனங்களின் ஆதரவு நாளுக்குநாள் நாம் தமிழர் கட்சிக்கு பெறுகிறது .. இஸ்லாமிய கிறிஸ்தவ கிந்து ஏன் ஆரிய பிராமனர்கள்கூட சீமானை எதிர்பார்கிறார்கள் …
வடுகர்கள் தமிழர்களை எப்படியாவது வீழ்த்திடனும்ன்னு சதியாட்டத்தில் ..
தமிழர் வெல்வது உறுதி… வடுகர்கள் ஒதுங்கி தமிழர்களுக்கு வழிவிட வேண்டும் ..
நாம் தமிழர் வெல்வது உறுதி
ஒரு சில மடையர்கள் குறை சொல்வதில் வல்லவர்கள இருகிர் .சற்று யோசித்தால் சிறப்பாக இருக்கும்
.தமிழன்டா
ம்ம்ம்… மீண்டும் சிரிப்பு தான் வருகிறது.
யாரடா அவன் தமிழர் நாட்டை பிரிக்க சொல்றது? முடிஞ்சா ஒத்து ஊது இல்லனா உனக்கு சங்கு ஊதிருவோம்!
குலம் பேசும் தெலுங்கு மன்னா, தமிழன்னு சொன்னா உனக்கு சிரிப்புதான் வரும்
ஹ…ஹ..
தனி தமிழ் நாடு மட்டுமே தமிழர்களை காப்பாற்றும் உயர்த்தும் .
உண்மையான தமிழன் இதை உணருவான்.
சிறியலங்கா,கேரளா,கர்நாடக,ஆந்திராவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!