தண்ணீரின்றி தள்ளிப்போகும் திருமணங்கள்: வறட்சியின் பிடியில் கர்நாடகா

karnadaka கர்நாடக மாநிலத்தில் பருவமழை பொய்த்துப் போனதை அடுத்து வறட்சி அதிகரித்துள்ளதால் திருமணங்கள் தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டது. பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது.

எப்போதுமே வறட்சி தலைவிரித்தாடும் வட கர்நாடகாவும் இதில் விதிவிலக்கு கிடையாது. கோடையின் தாக்கம் அதிகரிக்க குடிநீர் தட்டுப்பாடும் கூடிக்கொண்டே போகிறது.

இந்நிலையில் கர்நாடகாவில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள குடும்பங்கள் அதிகம் கொண்ட அம்மாவட்டங்களில் இது மிகப்பெரிய தொகையாகும். இதன் பின்னணியில் குடிநீர் மாஃபியாக்கள் இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

வட கர்நாடகாவின் பல பகுதிகளில்தண்ணீர் தட்டுப்பாட்டால், திருமணங்கள் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால் திருமண மண்டபங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

குடிநீர் பிரச்சினையோடு, மின்வெட்டு பிரச்சினையும் பெங்களூர் மக்களைவாட்டி வருகிறது. மின்சார வெட்டு காரணமாக, டேங்கர் லாரிகள் கூட நினைத்த நேரத்தில் தண்ணீரை ஏற்றி கொண்டுவர முடிவதில்லை. இதனால் லாரி தண்ணீருக்காக பல மணி நேரங்கள் மக்கள் காத்திருக்கின்றனர்.

ஜூன்மாதம் தொடங்கும் மழைக்காலத்தின்போது, கடந்த ஆண்டை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை இலாகா கூறியுள்ளது. அவ்வாறு பெய்யும் மழையைதான் மக்கள் மலை போல நம்பியுள்ளதாக கூறப்படுகிறது.

-http://news.lankasri.com

TAGS: