சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்காக அனல் பறக்கும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ள ஜெயலலிதாவை பார்ப்பதற்காக அவரது தொண்டர்கள் கடும் வெயிலில் அல்லாடுகின்றனர்.
பிரசாரம் மேற்கொள்ளவிருக்கும் இடத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் வரும் ஜெயலலிதா, மேடையில் அமர்ந்து கொண்டே பிரசாரம் செய்கிறார்.
கடந்த ஆண்டு தேர்தலில், செய்வீர்களா செய்வீர்களா என்ற வார்த்தை மந்திரத்தை அடிக்கடி சொல்லிக் கொண்டு ஒரு மணி நேரம் பிரசாரம் செய்தவர், இந்த தேர்தலில் அரைமணி நேரம் மட்டுமே பிரசாரம் செய்கிறார்.
மேலும், எதிர்கட்சியான திமுகவை விமர்சிப்பது, தேர்தல் நேரங்களில் குட்டிக்கதைகளை சொல்லி தொண்டர்களை குஷிப்படுத்துவார். ஆனால் அவையெல்லாம் சற்று தளர்ந்துவிட்டன.
தேர்தல் பிரசார மேடையில் இவர் மட்டுமே அமர்வார், அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள குட்டி மேடையில் வேட்பார்கள் அமர்ந்திருக்கிறார்கள்.
கோடை வெயில் தெரியாமல் இருக்கும் வகையில் மேடையில் பல ஏசிகளும், ஏர் கூலர்களும் பொருத்தப்படுகின்றன.
பிரசாரத்தை முடித்துக்கொண்டு தனது கட்சியின் இரட்டை இலை சின்னத்தை உற்சாகமாக காட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.
அருப்புக்கோட்டையில் இவர் நேற்று பிரசாரம் செய்கையில், கொளுத்தும் வெயிலில் மக்கள் திண்டாடியுள்ளனர், அம்மாவை பார்ப்பதற்காக காத்திருந்த பெண்களுக்கு தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் போன்றவவை அதிகமாக வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களே அதிகம், அவர்களுக்கு ரூ.200 மற்றும் மதிய சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், பொதுக்கூட்டத்திற்கு வந்தவர்கள் காலணி அணியாமல் வந்ததால், கொளுத்தும் வெயில் அவர்களது கால்களை சுட்டெறித்துள்ளது, பிளக்ஸ் பேனர் துணிகளைக் கிழித்தும், தண்ணீர் பாக்கெட் எடுத்து வந்த சாக்குத் துணிகளைக் கிழித்தும் கால்களில் சுற்றிக் காலணிகளாக்கி கொண்டார்கள்.
வெயில், புழுக்கத்துடன் வியர்வைகொட்டியதால் அதிமுகவினர் விசிறி மற்றும் தொப்பிகளை வழங்கினர். ஆனாலும், வெயிலைச் சமாளிக்க முடியாமல் மக்கள் திண்டாடியுள்ளனர்.
மேலும், தலையிலும் சாக்குபையை போட்டு அமர்ந்துகொண்டு பொதுக்கூட்டத்தை சமாளித்துள்ளனர்.
-http://news.lankasri.com
சொந்த மண்ணில் அடிமை வாழ்க்கை வாழ்ந்து கொண்டு கூத்தாட வந்த கோமளவள்ளிக்கு ம் திருட்டு இரயிலேறி வந்த கருநாய்நிதிக்கும் ஆளும் உரிமையை கொடுத்த மானங்கெட்ட தமிழினமே.நீ திருந்துவது எப்போது?
கர்நாடாகாவில் பிறந்”தாய்”
தமிழகத்திற்குள் புகுந்”தாய்”
சர்ச் பார்க்கில் படித்”தாய்”
சினிமாவில் நடித்”தாய்”
எம்ஜிஆரை கவிழ்த்”தாய்” ஏ
தேதோ செய்”தாய்”
பல பேரை கெடுத்”தாய்”
பதவியை பிடித்”தாய்”
நரி வேலை செய்”தாய்”
நல்லோரை அழித்”தாய்”
கட்சியை உடைத்”தாய்”
ஆட்சியை பிடித்”தாய்” அ
டிமைகளை வளர்த்”தாய்”
ஆணவமாய் திரிந்”தாய்”
தோழியை சேர்த்”தாய்”
கோடியை குவித்”தாய்”
ஊழல் புரிந்”தாய்”
உள்ளே இருந்”தாய்”
நிதியை கொடுத்”தாய்”
நீதியை வளைத்”தாய்”
ஏரியை திறந்”தாய்” எ
மனாய் வதைத்”தாய்”
செயல்பட மறந்”தாய்”
சென்னையை சிதைத்”தாய்”
வானிலே பறந்”தாய்”
வாட்சப் கண்ணீர் வடித்”தாய்”
முடங்கிக் கிடந்”தாய்”
முன்னேற்றம் தடுத்”தாய்”
குடிக்க வைத்”தாய்”
குடியைக் கெடுத்”தாய்”
தன்னைத் தானே “தாய்” என்று அழைத்”தாய்”
நீயெல்லாம் “தாயா” ???
கர்நாடாகாவில் பிறந்”தாய்”
தமிழகத்திற்குள் புகுந்”தாய்”
சர்ச் பார்க்கில் படித்”தாய்”
சினிமாவில் நடித்”தாய்”
எம்ஜிஆரை கவிழ்த்”தாய்”
ஏதேதோ செய்”தாய்”
பல பேரை கெடுத்”தாய்”
பதவியை பிடித்”தாய்”
நரி வேலை செய்”தாய்”
நல்லோரை அழித்”தாய்”
கட்சியை உடைத்”தாய்”
ஆட்சியை பிடித்”தாய்”
அடிமைகளை வளர்த்”தாய்”
ஆணவமாய் திரிந்”தாய்”
தோழியை சேர்த்”தாய்”
கோடியை குவித்”தாய்”
ஊழல் புரிந்”தாய்”
உள்ளே இருந்”தாய்”
நிதியை கொடுத்”தாய்”
நீதியை வளைத்”தாய்”
ஏரியை திறந்”தாய்” எ
மனாய் வதைத்”தாய்”
செயல்பட மறந்”தாய்”
சென்னையை சிதைத்”தாய்”
வானிலே பறந்”தாய்”
வாட்சப் கண்ணீர் வடித்”தாய்”
முடங்கிக் கிடந்”தாய்”
முன்னேற்றம் தடுத்”தாய்”
குடிக்க வைத்”தாய்”
குடியைக் கெடுத்”தாய்”
தன்னைத் தானே “தாய்” என்று அழைத்”தாய்”
நீயெல்லாம் “தாயா” ???
சபாஸ்.