திருப்பதியில் மூலவரான பெருமாளின் சிலை, முருகருடைய சிலைதான் என்றும் அந்த உண்மை, முன்பு கோயிலில் இருந்தவர்களால் மறைக்கப்பட்டது என்ற மாற்று கருத்தும் பரவி வருகிறது.
பெருமாளாக மாறிய முருகர்:
12 ம் நூற்றாண்டில், சைவர்களும், வைணவர்களும் திருப்பதியை சொந்தம் கொண்டாட போராடி வந்த நிலையில், ராமானுஜர் கருவறையில் சங்கு சக்கரத்தை வைத்துவிட்டு அரச முத்திரையோடு பூட்டுபோட்டாராம்.
பிறகு திறந்து பார்த்தபோது, சங்கும் சக்கரமும் சிலை மேல் இருந்ததாம். அதனால், சைவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டனர்.
பிறகு, சங்கு, சக்கரத்தை சிலையோடு பொருத்தி வைணவ கோயிலாக வஞ்சகமாக மாற்றினார்களாம்.
முருகர் கோயிலுக்கான முடிச்சுகள்:
- எந்த பெருமாள் கோயிலிலும் பக்தர்கள் மொட்டை போடும் பழக்கம் கிடையாது. முருகர் கோவிலில்தான் அது வழக்கம்.
- எந்த பெருமாளும் வெறும் இரண்டு கைகளோடு இருப்பதில்லை. மேலும், எல்லா பெருமாள் கோயிலிலும் கொடிமரமும் தெப்பக்குளமும் இருக்கும்.
- வைணவ தொண்டர்களான ஆழ்வார்கள் யாருமே அங்கு இருப்பது பெருமாள் இல்லை என்பதால், திருப்பதியை பாடியதில்லை.
- எந்த பெருமாள் சிலையாவது இடதுகையை கீழே தொங்கப்போட்டபடி, உள்ளங்கையை மட்டும் மடக்கி உயர்த்தியபடி உள்ளதா?
- உலகை ஆண்ட அரசன் நமது முப்பாட்டன் ஈசுவரன் என்ற சைவப்பெயர் பெருமாளுக்கு எப்படி பொருந்தும்?
- கோயிலை சுற்றிலும் கிடைத்துள்ள கல்வெட்டுகள் எல்லாமே தமிழ் கல்வெட்டுகள்தான்.
- கோயில் சுவர் முழுதும் உள்ள தமிழ் எழுத்துக்கள் வெள்ளை சுண்ணாம்படித்து மறைக்கப்பட்டுள்ளது.
- மூலவர் சிலையில் சங்கும் சக்கரமும் ஒட்டவைக்கப்பட்டிருப்பதும் அதன் பின்னால், போலியான பின்கைகள் ஒட்ட வைக்கப்பட்டிருப்பதும் கூர்ந்து கவனித்தால் தெரியும்.
- பெருமாள் கோயில் பெரும்பாலும் மலைமீது இருக்காது.
- தங்கத்தாலும் வைரத்தாலும் போர்த்தப்பட்டிருக்கும் அந்த சிலை முருகர் சிலைதான் என்றால் நம்ப முடிகிறதா?
வேங்கடத்தை பாடும் சங்க இலக்கியங்கள்:
சங்க தமிழ் இலக்கியங்களில் வேங்கடத்தைப் பற்றி பல இடங்களில் பாடப்பட்டுள்ளது..சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் ‘வேங்கடத்து நெடியோனே’ எனப் பாடுகிறார்.
ஆனால், முருகன் என்று குறிப்பிடவில்லை. அருணகிரிநாதர் ”வேந்த குமார குக சேந்த மயூர வடவேங்கட மாமலையில் உறைவோனே!” என பாடுகிறார்.
அங்கு இருப்பது முருகனே என அறிந்து பாடியுள்ளார். எந்த சாத்வீக தெய்வத்தின் சிலையின் கைகளில் கூட ஏதாவது ஒரு ஆயுதம் இருக்கும்.
ஆனால், திருமலை மூலவர் சிலை எந்த ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாக உள்ளது. அதனால்தான் தமிழ் முன்னோர்கள் வெறுங்கை வேடன் என்று வேங்கடனை அழைத்துள்ளனர்.
திருப்பதியை சுற்றிலும் தமிழ் ஊர்கள்:
திருப்பதி தமிழர்களுடைய நிலவரைக்குள் இருந்ததுதான் என்பதற்கு ஆதாரமாக அதைச்சுற்றிலும் உள்ள ஊர்பெயர்கள் தமிழ் பெயர்கள்.
அங்கு வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். சந்திரகிரி (தமிழர்- 60%), சித்தூர் (65%), குப்பம் (60%), நகரி (55%), புங்கனூர் (50%), சத்தியவேடு (70%), திருக்காளத்தி (65%), புத்தாளப்பட்டு(55%), திருப்பதி (55%), பல்லவனேறி (50%), நெல்லூர் (55%), கோவூர் (60%), உதயகிரி (55%).
பறிகொடுத்த உரிமைகள்:
கி.பி. 1300 களில் நாயக்கர் வருகையும் ஆட்சியும் தமிழக எல்லைக்குள் வரும்வரை திருப்பதி மட்டுமல்ல அதையும் தாண்டி துங்கப்பத்திரா வரை தமிழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது வரலாறு.
வரலாறு என்பதே அங்கீகரிக்கப்பட்ட மோசடி என்று ஒரு அறிஞர் கூறியுள்ளார். போரில் வெற்றிபெறும் வலிமையில்லை என்றால், பிறந்த மண்ணிலும் உரிமையில்லை என்ற தர்மத்தை நாடுபிடிக்கும் போர்க்கால வரலாறுகள் நமக்கு சொல்கிறது.
எப்படிப்பட்ட சிறந்த ஆட்சி நடந்தாலும், சிலரது ஆதிக்கங்களை முடிவுக்கு கொண்டு வர முடிவதில்லை என்பதற்கு நல்ல உதாரணம், கோயில்கள் கூட கட்டியவர்கள் மரபினருக்கு கிடைக்காமல் போவதுதான்.
-http://news.lankasri.com
பெருமாளே ! இது என்ன சோதனையப்பா.இந்த சோதனை உனக்கா, எனக்க ? அதை ஊரே சொல்லட்டும் போ …..!எழுமலை தேவுடா,யாருடா உண்மையான தேவகாறு ?
ஒரு கல்லை வைத்துக்கொண்டு இத்தனை சர்ச்சை செய்வது மனிதனின் மூலையில் ஏற்ப்பட்ட கோளாறே!!! கல்லு என்னைக்கு வந்து உண்மையை சொல்லும்!!! அன்னைக்கு முரு… இன்னைக்கு வெங்கடா… நாளைக்கு என்னவோ!!! நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையிலே!!!
நம் மதத்தில் தான் இப்படி பேச முடியும். மற்றமததில் பேசினால் உயிருக்கே ஆபத்து. ம்ம்ம்ம்… என் செய்வது. நம் மதம் தான் எல்லாம் நன்மைக்கே என்று போதித்து உள்ளதே .
Murugano perumalo
Ellam samithan.