தமிழகத்தின் சட்ட மன்றத்திக்கான வாக்களிப்பு எதிர் வரும் 16 ஆம் திகதி நாளை மறுதினம் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றது.
234 சட்ட மன்றஉறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இது.
பிரதான போட்டியாளர்களாக ஜெயலலிதா தலைமயிலான அ.தி.மு.க.மற்றும் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. மோதுகின்றது.
தமிழகத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை ஆறுமுனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வுடன் சோனியாவின் காங்கிரஸ் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கட்சியும் பலசிறிய கட்சிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளது
ஆறுமுனைப்போட்டி
ஆறுமுனைப்போட்டி என்பது அ.தி.மு.க., தி.மு.க, விஜயகாந்த் அணி, நாம் தமிழர்.பா.ஜ.க., பா.ம.க ஆகிய ஆறு அணிகள்தனித்து நிற்கின்றன.
கடந்த 25 ஆண்டுகளில் (1991-2016) தமிழகத்தில் நடந்த ஐந்து சட்டப்பேரவைத் தேர்தல்கள் பெரும்பாலும் மும்முனைப் போட்டிகளையே சந்தித்து வந்திருக்கின்றன.
1996-இல் மட்டும் நான்குமுனைப் போட்டி இருந்தது.பலமுனைப் போட்டி இருந்தால், நடுநிலைவாக்குகள் ஓர் அணி அல்லது ஒரு கட்சிக்கு ஆதரவாகவோ எதிராகவோ பதிவாகாமல் அவை பலவாறாகச் சிதறும்.
அவ்விதம் பலவாறாகப் பிரியும் போது சிறிய அளவுவாக்கு வித்தியாசங்கள் கூட வெற்றி, தோல்விகளைத் தீர்மானித்துவிடும் என்பது யதார்த்தம்.
அதாவது,எல்லாக் கட்சிகளுக்கும் ஒவ்வொரு வாக்கும் முக்கியம்.இந்த யதார்த்தம் புரிந்த எல்லாக் கட்சிகளுமே உள்ளூர அச்சத்தை கொண்டுள்ளது.
இதுவரைஇப்படி ஒரு வியூகத்தைத் தமிழகத்தேர்தல் களம் சந்தித்ததில்லை என்பதால்,இது யாருக்கு சாதகமாக அமையும் என்பது குறித்துக் கணிப்புகளும் ஊகங்களுமே உலவுகின்றன.
போட்டி மிகக்கடுமையாகவுள்ளது ஜெயா கட்சியும் கருணாநிதிகட்சியும் மிகக்கடுமையான போட்டியில்இறங்கியுள்ளார்கள்
ஜெயாவின் வெற்றி என்பது முற்று முழுதாக பணம்தான்
ஜெயாவின் வெற்றியின் தந்திரம் என்பது பணப்பட்டுவாடாதான்.கடந்த லோக் சபைதேர்தலில் தமிழ்நாட்டில் இருந்து தெரிவான 39 எம்பிக்களில் 37 எம்பிக்களையும் ஜெயா பணம்கொடுத்து வாக்காளர்களைவிலைக்கு வாங்கினார்.
அதாவது மாவட்டம்தோறும் தி.மு.க.வின் மாவட்ட செயலர்கள் வட்ட செயலர்கள் மற்றும்முக்கிய பிரமுகர்களை பணம் கொடுத்து பிடிப்பது போன்ற செயல்கள் மூலமாகவே ஜெயா சாதித்து வருகின்றார்.
இவைகளை அறிந்துகொண்ட தி.மு.க.ஜெயாவின் பணப் பட்டுவாடாவை வருமான வரித்துதுறையிடம்முறையிட்டு வருகின்றார்கள்.பணப் பட்டுவாடாவை பிடிப்பதற்காக பறக்கும்படை ஒன்றை வருமான வரித்துறை அதிகாரிகள்அமைத்து பல கோடி ரூபாக்களை கைப்பற்றியுள்ளார்கள்.
ஜெயா அணியின் பலபணப்பட்டு வாடாக்கள் பிடிக்கப்பட்டுள்ளது.
2011 தேர்தலில்மும்முனைப் போட்டி நிலவியது. அப்போதுஆட்சியில் இருந்த தி.மு.க.வின் தலைமையில்ஓர் அணியும், எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வின்தலைமையில் ஓர் அணியும், பா.ஜ.க. தலைமையில்ஓர் அணியும் களத்தில் இறங்கின.அந்த தேர்தல் தி.மு.க. அணி,அ.தி.மு.க. அணி ஆகியஇரு பெரும் அணிகளுக்கு இடையிலேதான்போட்டி என வாக்காளர்கள் கருதினார்கள்.
கடந்த 2011 தேர்தலில் இருமுனைப் போட்டி நிலவியது என்றே கொள்ள வேண்டும். இரு பெரும் திராவிடக்கட்சிகளின் அணிகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டபோது என்ன நடந்தது? சிறியவாக்கு வித்தியாசத்தால் வெற்றி தோல்விகளை தீர்மானித்தன.
இன்றிருப்பதைவிட வலுவான கூட்டணியோடு, கடந்த தேர்தலை எதிர்கொண்ட போதிலும், தி.மு.க.வின் முன்னணித் தலைவர்களில் சிலர் அன்று குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி காண முடிந்தது.கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 2 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வலுவில்லாத கூட்டணிகள்
இம்முறை, தி.மு.க. கூட்டணியில் ஓரளவு வாக்கு வளம் கொண்ட கட்சிகள் இல்லாததைப் போலவே, அ.தி.மு.க. கூட்டணியிலும் தே.மு.தி.க.மற்றும் மக்களிடம் ஓரளவு செல்வாக்குக் கொண்ட இடதுசாரிகள், புதிய தமிழகம், மனிதநேயமக்கள் கட்சி ஆகிய கட்சிகள்இல்லை.
நேருக்குநேர் நடந்த மோதலில் அ.தி.மு.க.வும் சில இடங்களில் திணறியது என்பது கவனிக்கத்தக்கது .
கடந்த முறை, தி.மு.க. ஆட்சியிலிருந்து கொண்டு தேர்தலைச் சந்தித்தது. அப்போது ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் அ.தி.மு.க.விற்கு உதவின. இந்த முறை ஆட்சியிலிருந்து கொண்டுஅ.தி.மு.க. தேர்தலைச் சந்திப்பதால்ஆட்சிக்கு எதிரான அதிருப்தி வாக்குகளையும் அது எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பல முனைப் போட்டிஎன்பதால் அவை கொத்தாக தி.மு.க.விற்குக்கிடைக்காமல் சிதறுண்டு போக வாய்ப்புண்டு என்பதைக்குறித்து வேண்டுமானால் அது ஆறுதல் கொள்ளலாம்
இதில் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், குறைந்த வித்தியாசத்தில் இந்தவெற்றிகளைத் தி.மு.க.பெற்ற போது,பா.ம.க., விடுதலைச்சிறுத்தைகள் போன்ற ஓரளவிற்கு வாக்குவளம் கொண்ட கட்சிகள் அதன் அணியில் இருந்தன. இன்று அவை அந்தஅணியில் இல்லை.
மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட தி.மு.க. தலைவர்களும் உண்டு. அதே போன்று ஜெயா அணியும் உண்டு. எனினும், கூட்டணியால் அதிக பலன் பெற்றகட்சி என்று தே.மு.தி.க.வைத்தான் சொல்ல வேண்டும். 2011 தேர்தலில் அது 29 இடங்களில் வென்றது. இந்தத் தேர்தலில். ஒவ்வொரு வாக்கும் வரலாறுகாணாத வலிமை பெறுகிறது.
ஜெயாவின் அபார நம்பிக்கை
தமிழகத்தேர்தல் களத்தில் இன்றைக்கு உரத்து ஒலிக்கும் முக்கியமான கோரிக்கை, கூட்டணி ஆட்சி. ஆளுங்கட்சியான அதிமுக அதைப் பற்றிப் பேசுவதே இல்லை.
திமுகவோ அதற்கான வாய்ப்பை அடியோடு நிராகரிக்கிறது. இந்த இரண்டு கட்சிகளும் தனியாக ஆட்சிஅமைக்கலாம் என்று நம்புகின்றார்கள்.
அதிலும் விசேடமாக ஜெயா ஒருஅபார குறுட்டு நம்பிக்கையில் உள்ளார். இந்த இரண்டுதிராவிடர் கட்சிகளும் இப்படியான நம்பிக்கைகொள்ளக் காரணம் இரண்டு திராவிடர் கட்சிகளையும் எதிர்த்து நிற்கக்கூடிய வலுவான கூட்டணி அமையவில்லை என்பதுதான்.
தற்போது நடைபெற்று வரும் தேர்தல்பரப்புரையில் விஜயகாந்த் நிஜமான கருத்துக்களைமுன்வைத்து வருகின்றார். ஆழமான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.ஜெயாவின் பொய் முகத்தைக்கிழித்து வருகின்றார் ஆனால் அவரதுகோபம் பொது இடத்தில் போதுமேடையில் முறை தவறி நடப்பது.
ஊடகவியலாளர்களிடம் முறைதவறி நடப்பது . நாக்கை மடித்துகோபப்படுவது அடிக்க கை ஓங்குவது நிதானம் இழந்து நடப்பதுபோன்ற செயல்களால் விஜயகாந்த் அரசியல் பரப்புரைமேடைகள் ஒரு கோமாளி மேடையாகவும் சிரிப்பு மேடையாகவும் மாறி விட்டது .
சீமான் உண்மையாக சிந்திக்கசெயல்படவும் மக்கள் விழிப்படையவும்அறிவு பூர்வமாக ஆவேசமாக பேசிவருகின்றார்.
இரண்டு திராவிடர் கட்சிகளையும் நாக்கைபிடுங்கி சாகும் அளவுக்கு நரம்புபுடைக்க பேசிவருகின்றார்.தமிழன் உணர்வுகளை தட்டிஎடுக்கும் அளவுக்கு சீமான் பரப்புரைசெய்து வருகின்றார்.
சீமானின் பரப்புரைஈழ மக்களின்அழிவுகள் கொலைகளை அரங்கேற்றிவருகின்றார்.புலிகளின் ஆதரவுக்குரலாக மாறியுள்ள சீமான் பரப்புரை இந்தியபொருளாதாரம் அதன் வீழ்ச்சி முன்னேற்றப்பாதையில் தமிழகத்தை எப்படி இட்டுச் செல்லலாம்போன்ற நல்ல சிந்தனைகளை முன்வைத்து வருகின்றார். பாராட்டலாம்.
தேர்தல் வெற்றிக்கணிப்பீடுகள்
கட்சிகள் | கிடைக்கும் இடங்கள் |
அதிமுக | 100-102 |
திமுக | 110-113 |
மநகூ | 6-7 |
நாம் தமிழர் | 4-5 |
பிஜேபி | 2-3 |
பாஜக | 1-1(,இது கூட நிச்சயமில்லை) |
ஏனைய கட்சிகள் | 3-3 |
ஜெயா அணியினர் ஒரே நாளில்ஒரே நேரத்தில் தமிழகம்முழுவதும் அ.தி..மு.க. காரர்ளால் பணப்பட்டுவாடா செய்யவுள்ளதாக தகவல்எட்டியுள்ளதாம்.அந்த வகையில் பணப் பட்டுவாடா நடக்குமானால் ஜெயா அணிக்கு மேலும் 10 சீட் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
பி;ஜே.பி க்கு கன்னியாகுமரியில் மட்டும் ஒரு சீட் கிடைக்கலாம் இந்தக்கட்சிக்கு வேறு எங்குமே வேறு வாய்ப்பில்லை.
எந்தக்கட்சிக்கும் ஆட்சிஅமைக்கக்கூடிய பெரும்பான்மையானஆகக் குறைந்த ஆசனங்களான118 சீட் கிடைக்கக் கூடிய வாய்ப்பில்லை.
அதனால் ஜெயா தரப்பும் கருனாநிதி தரப்பும் உடனடியாக விஜயகாந்த் அணி அல்லது சீமான் அணியுடன் ஒருபேச்சு வார்த்தையை ஆரம்பிக்கவேண்டிய அவசிய தேவை ஏற்படும்.
இதில் கருணாநிதி முந்திக் கொண்டு பேசுவார்.எதிர்வரும் 23 ஆம் திகதிஆட்சி அமைக்கக்கூடிய கட்சிதங்கள் தமிழக ஆளுநர் ரோசையாவிடம் பெரும்பான்மையை நிருபிக்கவேண்டும் .ஆனாலும் கூட்டணி தொங்கு பாலம்அமைந்தால் தமிழகம் மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை விரைவில் சந்திக்க வேண்டி வரும்..
இந்த தேர்தல் மூலம் சீமான் நிலையான ஒருகட்சியாக மக்கள் குறைகளை தட்டிக்கேட்கும் ஒரு குரலாகமாறுவார். ஊழல் லஞ்சத்திக்கு எதிரானசக்தியாக மாறுவர். சீமான் யாருடனும் கூட்டுச் சேராமல் தனியாகவே இயங்குவார்.
-http://news.lankasri.com
ஒன்று மட்டும் உண்மை. பெரும்பான்மையான தமிழ் நாட்டு பாமர மக்கள் பகுத்தறிவால் சிந்தித்துச் செயல்பட ஆறாவது அறிவு ஒன்று அவர்களுக்கு உள்ளதை மறக்க வைக்கப் பட்டு விட்டதை வெகு காலமாக உணராமல் ஓட்டுப் போட்டு வருகின்றனர். சிந்திக்கத் தெரிந்த தமிழன்தான் உலகை ஆள்வான். அதுவல்லாத தமிழன் தொடர்ந்து தமிழ் நாட்டில் வேர்வை சிந்திதான் வாழ்வான்.
தேனீ நான் பேசியவரைக்கும் பாதிக்குமேல் அரைவேட்காடாவே இருக்கிறானுங்க .. ஒண்ணுமே புரியமாட்டேங்குது .
சினிமா/ கிரிகெட் இரண்டும் நன்றாக புரிந்து கொள்கிறார்கள் ..
குடிபோதைல உளறும் தெலுங்கர் வியயராகவலூ நாய்டு ஆட்சிக்கு வரனும் என்று தவிக்கிரானுங்க ..மூன்று தெலுங்கர்கள் தமிழர் நிலத்தை ஆழனும்ன்னு தவியா தவிக்கிறாங்க. தங்களோட ஊடகபலத்தொடும் கோடிகணக்கான பணத்தோடும் சுயமாக அரைமணிநேரம் நிக்கமுடியாமல் அவதிப்படும் நோயாளிகள் தமிழர்களை ஆழ துடிக்கிறார்கள் காலகொடுமை !
வீடியோ கிளிப்பில் பார்த்தேன். மலேசியாவில் இருந்து வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார் என்று நாம் தமிழர் கட்சி அன்பர் சொல்ல, “எல்லோரும் அப்படித்தான் சொல்கின்றனர்” என்று ஒரு பாமர பெண்மனி சொல்ல, “நாங்க அந்த கட்சிகள் போல இல்லை” என்று சொல்வதையும் பார்த்தேன். இதுதான் தமிழ் நாட்டு பாமரர் நிலை. படித்தவர் நிலையோ சாதியத்தைப் பார்த்து ஓட்டுப் போடுவது. சமயவாதியின் நிலையோ, ஆத்திக கட்சிக்கு ஓட்டுப் போடுவோம் என்பதும், பகுத்தறியாது, தங்களை பகுத்தறிவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் நாத்திக கட்சிக்கு ஓட்டுப் போட பிரிந்து நின்றால் தமிழ் நாட்டுத் தமிழர் ஒன்றுபட்டு முன்னேறுவது எப்படி? ஆனால் சீமானின் பேச்சு தமிழரில் ஒரு பகுதியினரை சிந்திக்க வைத்துள்ளது என்பது உண்மை. இது அந்த காலத்தில் மறைமலையடிகள் செய்ததது போன்றது. இது தொடர வேண்டும். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள். 1926 -ம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கியதும் இப்படிதான். மதத்தை ஒரு பக்கம் வைத்து விட்டு, தமிழ் மொழியை முன் நிறுத்தி, தனக்கு ஓர் எதிரியை ஏற்படுத்திக் கொண்டு தமிழர்கள் ஒரு கட்சியின் பின் நின்று அரசியல் வெற்றி பெற்றார்கள். இந்த நிலை மீண்டும் மலர வேண்டும். இதற்கான சிந்தனைகளை நாம் மேலும் ‘fine tune’ செய்ய வேண்டும். இன்று வரை நாம் தமிழர் கட்சியை பொது ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தததை உணர்ந்து, இணையத்தின் வழி தற்சமயம் நாம் தமிழர் க ட்சியின் அழுத்தம் தொடர வேண்டும். அடுத்து பண பலம். இதனை எப்படிப் பெறுவது என்று யோசித்து அதற்கான வழி வகைகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும். இதில் புலிகள் கையாண்ட முறையைப் பயன்படுத்தலாம். இப்படித் தமிழ் நாட்டுத் தமிழர்பாலும், உலக வாழ் தமிழர் மத்தியிலும் ஒரு சிந்தனை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். இன்று விதை நட்டு ஆரம்பித்து விட்டோம். இனி அது செடியாகி மரமாகும் வேலையைப் பார்க்க வேண்டும். அதன் பின்னரே, மலர் மலர்ந்து, காய் காய்த்து, கனியாகும் நிலையைப் பற்றி யோசிக்க வேண்டும். அதற்கிடையில், மலேசியாவில் நாம் கண்கூடாக கண்டு நிலையைப் பார்த்து இங்குள்ள தமிழர் நிலையை முன்னேற்ற வழி காண்போம். நாம் தமிழ் நாட்டுத் தமிழருக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து காட்டுவோம்.
இன்றைய தமிழ்நாட்டுப் பத்திரிக்கைச் செய்தியில் தமிழ் நாட்டு மக்களின் மனோநிலையைப் பற்றி இவ்வாறு குறித்தனர்:
“ஆண்டாண்டு காலமாக மக்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும். இலவசத் திட்டங்களை எதிர்பார்த்துக் கொண்டு கையேந்தி இருக்க வேண்டும். இவர்களைச் சிந்திக்க விட்டுவிடக் கூடாது.இது தான் அரசியல்கட்சிகளின் திட்டம்.”
வாழ்க தமிழ் நாட்டு பணநாயகம்.
வெள்ளையன் மீண்டும் தமிழர் மண்ணை ஆள திராவிடன் துணை நிற்கிறான்…