தமிழக சட்டசபை தேர்தலில் பெரும்பாலான நட்சத்திரங்கள் தங்கள் வாக்கை பதிவு செய்தனர்.
சென்னை இந்தி பிரசார சபை வாக்குச்சாவடியில் நடிகர் சிவகுமார், கார்த்தி மற்றும் டி.ஆர் ஆகியோர் தனது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
சிவகுமார் பேசுகையில், யார் வெற்றி பெற்றாலும் உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து உடனடியாக மது விலக்கை கொண்டு வாருங்கள்.
1 கோடி பேரை குடிகாரர்களாகவும், 50 லட்சம் பேரை குடிநோயாளிகளாகவும் மாற்றி விட்டோம். இதனால் தான் பெண்கள் பாதுகாப்பு குறைந்து, கற்பழிப்புகள் அதிகம் நடைபெறுகின்றது.
இலவசம் கொடுத்து மக்களை பிச்சையெடுக்க வைக்காதீர்கள். நல்ல திட்டங்களை தந்து மக்கள் வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள்.
நிறைய விவசாய நிலம் இருக்கிறது, ஆனால் நீர் ஆதாரம் இல்லை. வடநாட்டில் என்ன நடக்கிறது, கங்கையும், யமுனையும் ஒவ்வொரு பருவமழை காலத்திலேயும் பேய்தனமாக மழை பெய்து ஊரையை அடித்துக் கொண்டு போகிறது. ஆயிரக்கணக்கான பேர் செத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கங்கையும், காவிரியையும் இணைப்பது மாதிரி தெரியவில்லை, இது நடக்ககூடிய விடயம் தான். ஆந்திராவில் கூட கோதாவரி, கங்கையை ஒன்றாக இணைத்தார்கள்.
நம்ம தமிழ்நாட்டில் இதையெல்லாம் பண்ணவில்லை என்றாலும், தயவுசெய்து ஆறு, ஏரி, குளங்களை தூர்வார வேண்டும், பருவமழை பெய்யும் போது தண்ணீரை சேர்த்து வைத்தால் விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும், அடுத்த தலைமுறைக்காக மரங்களை நட வேண்டும் என பேசியுள்ளார்.
-http://www.cineulagam.com
ஐயா சிவகுமார் இதை தேர்தலுக்கு முன் சொல்லியிருந்தால் அறிவாளி என்று சொல்லமுடியும். அகரம் என்று இதிகாச இட்டிலி சுட்டு ஊருக்கும் காசுக்கும் புத்தி சொல்ல ஒரு இன மான தகுதி வேண்டும். மலேசியா தமிழர் தேசியம் பேரவை பொதுச செயலர்.
இதோ! அம்மா வந்துட்டாங்க! நீங்க கேட்டதெல்லாம் கிடைக்கும்! நல்ல காலம் பொறந்திருச்சி! நல்ல காலம் பொறந்திருச்சி!
ஏய் ,,தண்ணி தொட்டி தேடிவந்த கண்ணு குட்டிதான்,,,,,இவரே தண்ணி போட்ட மாதிரி நடிச்சாரே ,,நீயே இந்த மாதிரி நடிக்க ஒப்புக்கொண்டு ,,,இப்ப வந்த நாடகத்திலே நடிக்கிறியா ,சிவகுமாரு
தமிழன் ஒரு நல்லது சொல்லிட்டா போதும் . எவ்வளவு கிண்டல் கேலி.. தமிழன் இந்த மாதிரி ஒற்றுமையா இருந்தா தமிழ் நாடு இப்போதும் மட்டும் இல்லை . எப்போதும் திராவிட நாடு தான்..
நல்லது சொன்னால் எவன் கேட்கப்போறான்
ஐயா சிவகுமார் அவர்களே- முதலில் திரைப்படங்களில் வரும் குடிகார காட்சிகளை முற்றாக துடைத்து ஒழியுங்கள்– முன்பெல்லாம் குடிகார காட்சிகள் சில படங்களில் தான் காண்பிப்பார்கள் ஆனால் இன்று என்னமோ இதுதான் தமிழர்களின் வாழ்க்கை என்பது போல் எல்லா திரைப்படங்களில் காண்பிக்கின்றார்கள்– அங்கு ஏன் பெரும்பாலோர் தாடி வைத்துக்கொண்டு முடி வெட்டாமல் அசிங்கமாக காணப்படுகின்றனர்? சுத்தமாக இருக்காலாமே. தொலைக்காட்சியில் செய்திகளில் அங்குள்ள பெண்கள் தங்களை நன்றாக பராமரிக்காமல் தலை சீவாமல் ஒழுங்காக சேலை கட்டாமலும் இருக்கின்றனர்–நான் சாதாரண மக்களைப்பற்றி கூறுகின்றேன். அங்குள்ள சமூக கட்டமைப்புகள் இது பற்றி ஏதாவது செய்வது நலம். தாடி வைத்தாலும் சீக்கியர்கள் போல் ஒழுங்கோடு வைத்திருக்க வேண்டும்– பெரும்பாலான நம்மவர்களின் தாடி மீசையை பார்த்தால் சகிக்க முடியவில்லை– மற்றவர்கள் எப்படி நம்மை மதிப்பர்? உன்னிப்பாக கவனித்தால் உயர் சாதியினர் என்ற மட தமிழர்கள் மற்றவர்கள் செருப்பு போட கூடாது கை கட்டி இருக்க வேண்டும் என்றும் – மற்றவகையில் அடிமைப்படுத்தியத்தின் விளைவோ?
ஹி ஹி ஹி தகர தமிழகத்தில் தேர்தலுக்கு முந்தைய தினம் சாராய விற்பனை 245 கோடி ஒரு நாள் விற்பனை ..வருட விற்பனை 30,000 கோடிகள் (ஐரோப்பிய நாடுகளில் கூட இந்த அளவு விபனை இல்லை )நடமாடும் பிணம் இலவச சாராயம் பக்கெட்டில் அடைத்து சங்க இலக்கியங்களை காட்டி ..சுடலைக்கும் ..பாவாடைக்கும் கொடுத்த விளைவு ..அங்கு இன்று முதியவர் ..வாலிபர் ..மாணவ ..மாணவிகள் எல்லாம் குடியில் திளைத்து மகிழ்கின்றார்கள் ….என்னே முன்னேற்றம்
போங்க சார்.நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவா ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.மதுவை ஒழிக்க …….
நாகேஷ்! சொல்லியிருக்கலாம் தான்! ஆனால் சினிமா எடுப்பவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையே!