தமிழகத்தில் நடந்து முடிந்த 232 தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலில், சீமானின் நாம் தமிழர் கட்சி முதன்முறையாக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளரை நிறுத்தி தேர்தலை சந்தித்தது.
தேர்தல் முடிவில் 232 தொகுதிகளில் இரு திராவிட கட்சிகளை தவிர, வேறு எந்த கூட்டணியோ, கட்சியோ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை,
இந்நிலையில் முதன்முறையாக தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சி மொத்தம் 1.1 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
தேர்தலின் முடிவு குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, வெகுவான மக்களுக்கு இந்த இரண்டு ஆட்சியும் வரக்கூடாது என்கிற எண்ணம் இருக்கிறது.
ஆனால், மாற்று யாரு என தெரியவில்லை? மாற்றாக நினைப்பவர்கள் அனைவரும் ஒரு ஏமாற்றாக மாறி ஒரு தற்காலிக தோல்வியை கூட தாங்க முடியாமல் அன்றைய தேவைக்காக படக்கென இரண்டு திராவிட கட்சிகளிடம் சரணடைந்து விடுகின்றனர்.
இதனால், இந்த இரண்டு திராவிட கட்சிகளையும் அசைக்க முடியவில்லை.
ஆனால், நாங்கள் எங்கள் பாதையில் எடுத்து இருக்கும் நோக்கத்தோடு உறுதியாக பயணித்து கொண்டு போக வேண்டிய தேவை தான் நாம் தமிழர் கட்சிக்கு இருக்கின்றது.
அதனால். நாங்கள் தற்காலிக தோல்வியை பற்றியும், எதை பற்றியும் கவலைப்படவில்லை. இலக்கை முடிவு செய்து தான் நாங்கள் பயணிக்கின்றோம், எங்களுக்கு பாதை சரியாக உள்ளது, பயண தூரம் தான் சற்று அதிகமாக உள்ளது.
அதனால், பதறாமலும், சிதறாமலும் உளவு சக்தியாகவும், பிளவு சக்தியாகவும் இல்லாமல் கவனமாக நடந்த போக வேண்டிய தேவை தான் இருக்கின்றது.
அதனால் தான் நாங்கள் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை, என்னை வெல்ல வைத்தால் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது, தோல்வியடைய வைத்தாலும் என்னுடைய வருத்தமும் துயரமும் அவங்களுக்கு தான்.
அதனால், தான் நங்கள் துணிந்து மாற்று அரசியல், மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி நாமே மாற்று நாம் தமிழரே மாற்று, திராவிட கட்சிக்கு மற்றொரு திராவிட கட்சி மாற்றாக இருக்க முடியாது என சீமான் கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
இலங்கை பிரச்சனையை முதலில் பாருங்கள் சீமான் அவர்களே. பிறகு தமிழ் நாட்டு பிரச்சனைக்கு வருவோம். தாங்கள் ஈழ பிரச்சனையின் அடிப்படையில் தான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியல் பிரவேசம் கொண்டீர்கள். இபொழுது தமிழ் ஈழத்தை மறந்து, தமிழ் நாட்டு அரசியலில் உழன்று கொண்டு இருக்கிறீர்கள். என்னை கொடுமை சார் இது ?
எங்க பார்வையிலே,அங்க சோரம் போன சொத்த தமிழனுங்களை முதெல்ல நல்ல உரமா போட்டு தேத்துங்க.எங்க தலைவர் சொன்ன மாதிரி பில்டிங் ஸ்ட்ரோங் பேஸ்மென்ட்தான் கொஞ்சம் வீக்கு! இன்னொரு முக்கியமான குறிப்பு: தம்பிகளின் உழைப்பையும் நாம் தமிழர் கட்சி வலைபகுதியிலே சேர்த்துக்குங்க…அவங்களும் நிறையா உழைச்சாங்க.அதலெ பேரா கல்யாணசுந்தரம்,பேரா அருண்குமார்,துருவன்,அறிவு செல்வன்,இடும்பாவனம், அரசேந்திர சோழன்,திருப்பூர் சுடலை மற்றும் ஏனையோர்
மிகவும் சிறப்பாக பேசியுள்ளனர்.எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு…மிக மிக முக்கியம் ஒற்றுமையை பேணுங்கள்…மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்!!!
சரியாகச் சொன்னீர்கள்! சற்று அதிகமான பயண தூரத்தில் திராவிடக்கட்சிகள் நாட்டை விற்று விடுவார்களே! என்பது தான் வருத்தம்.
Dhilip 2 அவர்களே !
தமிழ் நாட்டை யார் ஆண்டாளும் ஆளாவிட்டாலும் இலங்கை பிரச்சனையை தீர்க்க முடியாது என்பதுதான் உண்மை. இதை 30 ஆண்டுகளாக பார்த்து கொண்டுதான் வருகிறோம். கடந்த காலங்களில் எத்தனயோ முறை அமைதி பேச்சு வெற்றியடையும் தருவாயில் இருக்கும்போதெல்லாம் தங்களுக்குள் “யார் பலசாலிகள்” என்று இலங்கை தமிழர் விடுதலைக்கு போராடிய முன்னணி குழுக்கள் தங்களுக்குள்ளேயே சகோதரயுத்தத்தை தொடங்கி அவர்களே பலவீனமடைந்து கொண்டார்கள். இதற்கு தமிழ்நாடோ அல்லது இந்தியாவோ பொறுப்பாக முடியாது. இதை அனைத்தும் அறிந்தும் தமிழ் நாட்டில் அரசியல் நடத்தி பிழைக்க வேறுவழியின்றி அவர்களுக்கு தேவைப்படும்போதெல்லாம் இலங்கை பிரச்சனையை கையில் எடுத்து கொள்கிறார்கள்.
அதாவது இந்திய தேசிய அரசியலில் ஹிந்துத்வா சங்க பரிவாரங்கள் அரசியல் ஆதாயத்திற்காக தேவைப்படும்போதெல்லாம் ராமரை தோளில் தூக்கி கொண்டு உலா வருவதும் பிறகு ராமரை வனவாசம் அனுப்பி வைப்பதுபோல.
முதல்வரே நன்றாகச் சொன்னீர். இலங்கை பிரச்சனையை இலங்கையர்களே தீர்த்துக் கொள்வர், வீணாக வெளியில் இருந்து அவர்களுக்கு நல்லது செய்கிறேன் என்று தமிழ் நாட்டு சுயநலவாதிகள் மேலும் குட்டையை குழப்பி இலங்கையருக்கு பாதகம் செய்யாமல் இருந்தால் சரி.
தான் ஒரு தமிழன் என்ற உணர்வே இல்லாதவன்களிடம் எதை எதிர் பார்க்க முடியும்?
தமிழராகிய யாவருக்கும் தமிழ் என்ற உணர்வு உண்டு. என்ன, சிலர் உணர்ச்சி மிகுதியால் வெறியுடன் செயல் படுகின்றனர். சிலர் உண்மையை உணர்ந்து செயல் படுகின்றனர். அவ்வளவே. வித்தியாசம்.
முதல்வரே, இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் ராமருக்கு கோயில், ஹிந்துத்வா ஆட்சி என்றால் ராமருக்கு வனவாசம் என்று நக்கல் பண்ணுகிறீர்.
en thaai thamizh தமிழன் என்ற உணர்வில் யாழ்ப்பாணத்தானோ
ஐயா anonymous அவர்களே தயவு செய்து உங்களின் குறுகிய மனப்பான்மையை பறைசாற்ற வேண்டாம். எனக்கு தமிழன் எங்கிருந்தாலும் தமிழனே– ஈழ தமிழர்கள் பலர் தமிழ் நாட்டு தமிழர்களை மட்டமாக பார்த்தும் அவர்களை ஓரங்கட்டி இளக்காரமாக பார்த்தார்கள் என்றும் எனக்கு தெரியும்- ஆனால் இன்று நம்முடைய ஒற்றுமை தேவை- அதற்காக நான் எந்த வகை தமிழரையும் ஏற்று கொள்வேன் -கேடு கெட்ட-கெட்ட தமிழர்களை தவிர. நான் தஞ்சாவூர் தமிழ் பரம்பரை– எனினும் இது பெருமைக்காக கூறவில்லை– எனக்கு உயர்வு தாழ்வு ஜாதி கிடையாது–நல்லதும் கேட்டதும் தான். தமிழனாக எங்கிருந்தாலும் அவன் தமிழனே- தமிழ் உணர்வு இருக்கவேண்டும். நான் யாழ்ப்பாணத்தான் என்றால் நான் தமிழன் இல்லையோ?
யாழ்ப்பாணத் தமிழன் ஒரு காலக்கட்டத்தில் தன்னை இலங்கையன் என்று தான் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளுவான்.காரணம் இலங்கைத் தமிழன் என்றால் தன்னையும் தோட்டத்தில் உள்ள கூலித் தமிழனோடு ஒப்பிடுவார்களோ என்று ஒரு பயம் இருந்தது! திடீரென ஒரு நாள் தன்னைத் தமிழன் என்று அவனே சொல்லிக் கொண்டான். எல்லாம் கால நேரம்!
பிரிட்டிஷ் அரசு அன்று இந்திய தமிழர்களையும் ..இலங்கை தமிழர்களையும் வருவித்தது வெவ்வேறு காரணம்களுக்காக …பாவம் கடந்த தகர தமிழா நாடு தேர்தலில் வெறும் 250 பெற்றுவிட்டு வாக்கு போடவர்களை பார்த்தால் தகர தமிழகம் …1824 இல் அதாவது பிரிட்டிஷ் காரன் இந்திய தமிழர்களை மலேசியா வுக்கு கொண்டுவந்த காலத்திலில் தான் தகர தமிழகமும் இன்று இருக்கின்றது
பர்மாவில் இன்று 15 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றார்கள் ..பேசுவது சுத்த தமிழ் தவிர காலை அடக்குதல் ,,கும்மி ..கோலாட்டம் …எல்லாம் இன்றும் நடக்கின்றன ..வெறும் 20 லட்சம் ஈழ தமிழர்கள் தனி நாடு கோரி போராடினார்கள் …போராடிக்கொண்டு உள்ளார்கள் அனால் 7 கோடி பிறவிகள் உள்ள தகர தமிழா நாட்டில் …மதிய அரசின் தடையை மீறி …தமிழன் கலாச்சர ஜல்லி கட்டு நடத்தி ..சிறை செல்ல ஒரு வனுக்கு துணிவு இல்லை …ஈன பிறவிகள்
நேற்று ஊரிலிருந்து வந்த உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தேர்தலுக்கு அவர் ஊரில் ஒவ்வொரு ஓட்டுக்கும் Rs. 750/- அ.தி.மு.க. சார்பில் கொடுக்கப் பட்டதாம். திருத்தணி மாவட்டத்தில் அ.தி.மு.க வெற்றி கண்டது.
அநோய்! ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். அது தகரத் தமிழ்நாடு தான்! இந்த ஏழு கோடி ஈனப்பிறவிகளை நம்பித்தான் வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் இன்னொரு ஈனப்பிறவிகளான தமிழர் கூட்டம் காலில் மண்டியிட்டுக் கிடக்கிறது! தகரத்திற்குக் கீழே இன்னொரு தகரம்!
தமிழ் நாட்டை தகர நாடு, தகர தமிழர் என விமர்சிப்பதை நான் கண்டிக்கிறேன். நீங்கள் மேதாவியாக இருந்தால் திருத்துங்கள், அது உங்கள் கடமை. ஆனால் தூற்றாதிர்கல், அது கேவலம். தமிழர்களை “ஈனப்பிறவி” என்று குரிபிடுபவர்கள் ஒன்றும் உயர்ந்து விடவில்லை. அவர் அவருக்கு ஒட்டு போட உரிமையுள்ளது. மற்றவர் ஓட்டுரிமையை நீங்கள் கையில் எடுக்காதிர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றல் உடனே மற்றவர்கல் ஈனப்பிறவி, தகர நாடு, தகர தமிழர் என்று பறை சாற்றுவது மானுட அழகல்ல. நிறுத்துங்கள் உங்கள் ஒப்பாரியை.
ஆதங்கத்தை வெளிப்படுத்துவது தமிழ் நாட்டுத் தமிழர் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகச் சொல்வது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுவது ஜனநாயகத்தை விபாச்சார விடுதியாக்கி விடுவதற்கு ஒப்பாகும். மலேசியாவில் நடைப்பெற போகும் இடைத் தேர்தலும் அவ்வாறேயாகும் என்பதில் ஐயமில்லை.
ஆதங்கத்தை வெளிப்படுத்துவது சரிதான், நண்பரே! சொல்லுபவன் யார் என்று பார்க்க வேண்டும். எல்லாக் காலத்திலும் தமிழனுக்கு எதிரியாக இருந்தவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.அவனுடைய நேரம் இப்போது தமிழன் காலில் விழவேண்டிய கட்டாயம். ஆனாலும் அவனுக்கு இன்னும் திமிர் இருக்கிறதே! அப்படி அவன் நம்மைவிட உயர்ந்தவன் என்றாலும் மன்னித்து விடலாம். அவனே நாடோடி! இதிலென்ன நாட்டமை! குறிப்பு: மன்னிக்கவும். ஒருவனின் தவறுக்காக ஒரு சமுதாயத்தையே வசை பாட வேண்டியிருக்கிறது.
நம்மில் யாரும் உயர்ந்தவர் தாழ்ந்தவர் இல்லை. நாம் அனைவரும் உயிர் என்பதில் ஒரு குலம்.
சப்பை கட்டு கட்டுறதுல, இந்த பேப்பர் புலிகளை நினச்சா, சிரிப்புதான் வருது……