திரும்ப வருவேனு எதிர்ப்பார்க்கல இல்ல…

திரும்ப வருவேனு எதிர்ப்பார்க்கல இல்ல- சூர்யா ஸ்பெஷல் - Cineulagam

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே மாஸ்+கிளாஸ் இரண்டிலும் புகுந்து விளையாடுவார்கள். அந்த வரிசையில் ரசிகர்களுக்கு வித்தியாச வித்தியாசமாக படங்களை கொடுத்து ரசிக்கவைக்கும் சூர்யா தான் சினி உலகத்தின் இந்த மாத Star Of The Month.

சூர்யா சினிமா வாசனையே தெரியாது வேறு ஒரு பணியை செய்துக்கொண்டிருந்தவரை நேருக்கு நேர் படத்தில் அஜித்தின்விலகல் காரணமாக வசந்த் வலுக்கட்டயமாக இழுத்து வந்தார்.

ஆரம்பத்திலிருந்தே தான் இன்னாரின் மகன் என்று காட்டிக்கொள்ளாதவர் சூர்யா. இதற்கு உதாரணமாக அவர் ஆரம்பத்தில் நடித்த பல படங்கள் அறிமுக இயக்குனர் படங்களே.

படத்தில் இவருக்கு நடிப்பே வரவில்லை என்றார்கள் நந்தாவில்நடிப்பில் முழு உருவமாக மாறி கண்களாலேயே மிரட்டினார். கூன் விழுந்த கதாபாத்திரத்தில் பேரழகனான சூர்யா தன் அழகை நம்பாமல் நடிப்பை நம்பி களம் இறங்கி வெற்றி கண்டார்.

என்ன இருந்தாலும் ஒரு மாஸ் ஹீரோ என்றால் தான் தமிழ் சினிமாவில் காலத்திற்கு நிலைத்து நிற்க முடியும், வெறும் மாஸ் மட்டுமில்லை என் படங்களில் ஒரு வகையாக கிளாஸும் இருக்க வேண்டும் என காக்க காக்க, கஜினி ஆகிய படங்களின் மூலம் ஒட்டு மொத்த கோலிவுட்டையும் தன் வசூல் சாதனையால் ஆச்சரியப்படவைத்தார்.

நல்ல நடிகன் என்று பெயர் வாங்கினால் மட்டும் போதாது, நல்ல குடிமனாக தன் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என ‘அகரம்’ என்ற நிறுவனத்தின் கீழ் பல ஏழை குழந்தைகளின் படிப்பிற்கு உதவுகிறார். இதன் காரணமாகவே சூர்யாவிற்கு பெண்கள் மத்தியில் தனி கிரேஸ் உருவானது. ஆனால், அவரின் பார்வை எப்போதும் ஜோதிகா மீது தான்.

தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்துக்கொண்டு இன்று ஒரு சக்சஸ்புல் கணவராகவும் இருக்கிறார். வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம், சிங்கம் 2 என சூர்யா தன் சினிமா பயணத்தில் உச்சத்தை தொட்டார்.

ஆனால், மாற்றான், அஞ்சான், மாஸ் என இவர் தன் உழைப்பை முழுமையாக கொடுத்து நடித்தாலும் ஒரு சில காரணங்களால் இந்த படங்கள் தோல்வியடை சூர்யா இனி மீண்டு வருவாரா என காத்திருந்த நிலையில் தமிழ் சினிமாவையே வேறு ஒரு தளத்திற்கு எடுத்து செல்லும் 24 படத்தில் களம் இறங்கி ஹிட் அடித்தார்.

பல வசூல் சாதனைகளை செய்து எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கும் சூர்யா அவர் ஏதும் பேச தேவையில்லை, அவர் வசனமே போதும் ‘எதிர்ப்பார்க்கல இல்ல, நா திரும்பி வருவேன்னு எதிர்ப்பார்க்கல இல்ல’ என்ற வசனத்தின் அர்த்தம் தற்போது புரிந்திருக்கும். இதேபோல் உங்களின் பாய்ச்சல் சிங்கம்-3ல் பல மடங்க பாய வாழ்த்துக்கள்.

-http://www.cineulagam.com