மகாராஷ்டிராவில் விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை விற்று சொந்த பணத்தில் அணை கட்டி வருவது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் அகோலா மாவட்டம், சாங்கி துர்க்வாடா என்ற கிராமத்தை சேர்ந்த சஞ்சய் (42), என்ற விவசாயிக்கு 30 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இவரது நிலத்தின் அருகே செல்லும் கால்வாயில், ஆண்டுதோறும் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இவரது நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர் அடித்து செல்லப்படுகிறது. இதனால் சஞ்சய்க்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுவந்துள்ளது.
எனவே, அப்பகுதியில் அணை ஒன்றை கட்டுவதற்கு உதவி செய்யும்படி அரசுக்கு சஞ்சய் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் அவரது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காத நிலையில், அவர் தனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தை ரூ.55 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
அந்த பணத்தில் தற்போது அணையை கட்டத்தொடங்கியுள்ளார். கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த பணி இன்னும் 2 வாரங்களின் முடிவடைய உள்ளது.
சஞ்சய் இது தொடர்பாக பேசுகையில், நான் சொந்த பணத்தில் இந்த அணையை கட்டியபோதும் அரசு அதிகாரிகள் பல்வேறு வகைகளில் நெருக்கடி கொடுப்பதையே வேலையாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் இந்த பகுதி விவசாயிகள் எனக்கு உறுதுணையாக நின்று அணையை கட்ட உதவி செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com