இந்தியாவில் வசித்து வரும் ஆப்பிரிக்க நாட்டவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை கண்டித்து, ஆப்பிரிக்கா நாட்டினர் பலர் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் கூடி ஆர்ப்பாட்டத்தல் ஈடுப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இந்தியாவின் தலைநகரிலும், ஏனைய இடங்களிலும், உள்ள ஆப்பிரிக்க நாட்டினர் குறிப்பாக மாணவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் வசிக்கும் ஆப்பிரிக்கர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை எற்படுத்தியுள்ளது.
டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஆப்பிரிக்கா நாட்டவர்களுக்கு எதிரான தாக்குதலை தடுக்க இந்திய அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து இந்தியா வந்திருக்கும் அனைவரின் பாதுகாப்பையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 20ம் திகதி, வசந்த் குஞ்ச் பகுதியில் காங்கோ நாட்டைச் சேர்ந்த ஆலிவர் என்பவரை 3 பேர் கொண்ட கும்பல் கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர்.
ஒரு தனியார் மையத்தில் பிரெஞ்சு ஆசிரியராக பணியாற்றும் ஆலிவர், இரவு நேரத்தில் ஒரு ஆட்டோவை மறித்துள்ளார். அப்போது அங்கிருந்த 3 பேர் கும்பலும்அந்த ஆட்டோவில் செல்ல முயன்றுள்ளனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆலிவர் ஆட்டோவில் அமர்ந்து கொண்டு இறங்க மறுத்துள்ளார், உடனே குடிபோதையில் இருந்த 3 பேர் கும்பல் அவரை கற்களை எறிந்து தாக்கியுள்ளனர், இதில் தலையில் பலத்த காயமடைந்த ஆலிவர் இறந்துள்ளார்.
இச்சம்பவத்தையடுத்து மெஹ்ராலி பகுதியில் 4 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது, இன ரீதியாக கேலி செய்து, ஆப்ரிக்காவுக்கு திரும்பி செல்லும்படி அக்கம்பக்கத்தினர் கிரிக்கெட் மட்டையாலும, கம்புகளாலும் தாக்குதல் நடத்துகின்றனர் என பலர் புகார் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலில் ஆப்ரிக்கர்கள் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குலுக்கு ஆப்ரிக்க நாடுகளின் தூதர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் ஆகியோரை தொடர்புக் கொண்டு, ஆப்பிரிக்க மாணவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தியுள்ளனர்.
-http://news.lankasri.com
ஆப்ரிக்கா மக்களே தயவு செய்து இந்தியாவிற்கு வராதீர்.இங்குள்ள சற்று கருப்பு நிற மக்களையே அவர்கள் சாதி என்ற பெயரில் மதிப்பதில்லை.பாவம் நீங்கள் அதிக கருப்பு மக்கள் வர வேண்டாம்.உங்களுக்கு வேதனை தான் மிஞ்சும்.
ஆப்ரிக்க மக்களே தயவு செய்து இந்தியாவிற்கு வராதீர் .இங்குள்ள சற்று கருப்பு நிற மக்களையே அவர்கள் சாதி என்ற பெயரில் அவமதிப்பார்கள்.நீங்கள் வேற அதிக கருப்பாய் இருப்பீர்கள் .உங்களை ………. வரவேண்டாம்,உங்களுக்கு வேதனைதான் மிஞ்சும்.
நமது நாட்டிலும் ஆப்பரிக்க நாட்டு இளைஞர்களைப் பார்க்கிறீர்கள் தானே?அவர்களைப் பார்த்து போலிஸ்காரனே பயப்படுகிறான். எந்தச் சட்டத்தையும் மதிப்பதில்லை. இவர்கள் மற்ற நாடுகளிலும் இப்படித்தான் இருப்பார்கள். அதனால் உடனடியாக எந்த முடிவுக்கும் வர முடியவில்லை!