பெண்களை கேலி செய்யும் குடிமகன்கள்: டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கலெக்டரிடம் மனு

பெண்களை கேலி செய்யும் குடிமகன்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

பெண்களை கேலி செய்யும் குடிமகன்கள்: டாஸ்மாக் மதுக்கடைகளை மூட கலெக்டரிடம் மனு

ஈரோடு:

ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு எஸ்.கே.சி. நகர் பகுதியை சேர்ந்த 20–க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அவர்கள் கலெக்டர் பிரபாகரிடம் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

நாங்கள் ஈரோடு சூரம் பட்டி 4 ரோடு எஸ்.கே.சி. நகர் பகுதியில் 3500 குடும்பங்கள் வசித்து வருகிறோம். அந்த பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி. மேலும் வழிபாட்டு தலங்கள், குடிநீர் தொட்டி ஆகியவை அந்த மதுபான கடையை சுற்றி உள்ளது வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள் அதிகளவில் இந்த வழியாக சென்று வருகிறார்கள்.

மேலும் அந்த மதுக்கடையில் மது குடிக்கும் குடிமகன்கள் அந்த வழியாக வரும் பெண்கள் மற்று மாணவிகளை கேலி-கிண்டல் செய்வதுடன் ஆபாசமாகவும் நடந்து கொள்கிறார்கள். ரோட்டிலேயே வாந்தி எடுத்து சுகாதாரக்கேடு ஏற்படுத்துகிறார்கள். இந்த வழியாக பெண்கள், மாணவிகள் செல்லவே பயப்படுகிறார்கள்.

தற்போது பள்ளிகள் திறக்கப்படும் நேரம் என்பதால் இந்த மதுகடையை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அதே போல் கோபி பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.அதில், கோபி நகரில் உள்ள பாஸ்கரன் வீதியில் ஒரு டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது.

இந்த மதுகடையையொட்டி பெண்கள் விடுதி, அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் உள்பட பல அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடைக்கு வருபவர்கள் மது குடித்து விட்டு அந்த வழியாக வரும் பெண்களை கேலி-கிணடல் செய்கிறார்கள்.

மேலும் மருத்துவனை மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் அவர்கள் செய்யும் அலங்கோலத்தால் ஒருவித சங்கடத்துடனேயே சென்று வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை உடனடியாக எடுக்க வேண் டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

இதே போல் சித்தோடு ஓடக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் சித்தோடு நால் ரோடு பகுதியில் ஒரு மதுபானகடை உள்ளது. இந்த கடை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ளது.

இங்கு மது குடிப்பவர்கள் ரோட்டில் நின்று கொண்டு ஆபாசமாக பேசுகிறார்கள். மேலும் குடிபோதையில் தள்ளாடியபடி வரும் வாகனங்கள் மீதும் விழுவது போல செல்கிறார்கள். இதனால் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது.

அந்த பகுதியில் பஸ் ஏற வரும் பெண்கள் மது குடிப்பவர்கள் செய்யும் ரகளையால் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. எனவே இந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

-http://www.maalaimalar.com

TAGS: