கேரளாவில் உள்ள சபரிமலை கோயிலில் பெண் பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக அனைத்து கட்சிகளுடன் கருத்துகேட்பு கூட்டம் நடத்தவுள்ளதாக புதிதாக அமைந்துள்ள அரசு தெரிவித்துள்ளது.
இந்து மதத்தின் ஆகம விதிகளின்படி சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு பெண் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
இதற்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டங்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் கேரளாவில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் பினராய் விஜயன் தலைமையிலான அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பை தேவசம் போர்டு அமைச்சரான கடக்கம்பள்ளி சுரேந்திரன் நேற்று திருவனந்தப்புரத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.
அப்போது, இந்த நவீன காலத்தில் எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பூஜை வழிபாட்டு முறைகளிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
எனினும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண் பக்தர்களை அனுமதிக்கும் விவகாரத்தில் அரசு அவசரப்பட விரும்பவில்லை.
இது தொடர்பாக அனைத்து கட்சிகளை கூட்டி கருத்து கேட்கப்படும். அனைவரது கருத்துக்களையும் கேட்ட பிறகு அதன் அடிப்படையில் அரசு முடிவெடுத்து அறிவிக்க உள்ளதாக அமைச்சர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
-http://news.lankasri.com