கவுரவ கொலைகளை தடுக்க புது சட்டம் இயற்றப்படுமா?

india_001இந்திய மக்கள் மன்றத்தின் தலைவராக இருப்பவர் வாராகி.

இவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன.

ஆனால் இந்த கட்சிகள் கவுரவக் கொலைகளைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கடந்த 2003-ம் ஆண்டு கலப்பு திருமணம் செய்த விருத்தாச்சலம் முருகேசன்- கண்ணகி ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

அதன்பின்னர், தூத்துக்குடி வினோத்குமார், சேலம் இளவரசன், திருச்செங்கோடு கோகுல்ராஜ், மன்னார்குடி அமிர்தவள்ளி- பழனியப்பன் என்று ஏராளமானோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கலப்பு திருமணம் செய்துக் கொண்ட உடுமலைப்பேட்டை சங்கரை ஒரு கும்பல் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்துள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் கலப்பு திருமணம் செய்துக் கொண்ட 81 பேர் இறந்துள்ளனர் என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த கவுரவக் கொலைகளைத் தடுக்க,சுப்ரீம் கோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு பிறப்பித்துள்ளது.

அதில், கவுரவக்கொலைகள் நடந்தால், சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டரும், போலீஸ் சூப்பிரண்டும்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கலாம் என்று கூறியுள்ளது.

எனவே தமிழகத்தில் நடைபெறும் கவுரவக் கொலைகளை தடுக்க புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் முதல்-அமைச்சர் தலைமையிலானஅமைச்சரவைக்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் உத்தரவிடவேண்டும்.

வன்கொடுமை அதிகமாக உள்ள இடங்களில் வசிக்கும் எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவு மக்களுக்கு ஆயுதங்கள் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது, ஜூலை 27-ந் திகதிக்கு தள்ளிவைத்ததுடன் தமிழக தலைமை செயலாளர், தேசிய எஸ்.சி மற்றும் எஸ்.டி. ஆணையத்தின் செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

-http://news.lankasri.com

TAGS: