ஏழைகளின் பசியாற்ற கேரள பெண்ணின் புதுமையான யோசனை!

pic02கேரளாவில் பெண்மணி ஒருவர் ஏழைகளுக்கு உணவளிப்பதற்காக புதுமையான முயற்சியை கையாண்டுள்ளார்.

கொச்சியில் ஓட்டல் நடத்தி வரும் மினு பவுலின் என்ற பெண், தனது உணவக வாசலில் 420 லிட்டர் கொள்ளவு கொண்ட குளிர்சாதனப் பெட்டியை வைத்துள்ளார்.

அந்த குளிர்சாதனப் பெட்டியில், சாப்பிட வழியில்லாமல் இருக்கும் 50 மக்களுக்கு தினமும் உணவுகளை வைத்து விடுகிறார், 24 மணி நேரமும் இருக்கும் இந்த குளிர்சாதனப் பெட்டியில் யார் வேண்டுமானாலும் உணவு வைக்கலாம்.

இந்த உணவினை பசியில் வாடும் யாரும் எடுத்து சாப்பிடலாம், மேலும் இதில் வைக்கும் உணவுகளை சரியாக கட்டி வைக்க வேண்டும், கெட்டுப்போன உணவுகளை வைக்கக்கூடாது.

மேலும் உணவு வைக்கப்படும் திகதி அதில் குறிக்கப்படும், இதனை வைத்து உணவை சாப்பிட எடுப்பவர்கள் அதன் தரத்தை அறிந்து கொள்ள முடியும்.

இதுகுறித்து மினு கூறியதாவது, குப்பைகளில் உணவை தேடி திரியும் பலரை கண்டு நான் மனம் வருந்தியுள்ளேன், இதனால் எனது உணவகத்தின் வெளிப்புறத்தில் நம்ம மரம் என்ற உணவு வங்கியை தொடங்கியுள்ளேன்.

அதற்காக எனது உணவகத்தில் இருந்துதான் உணவினை வாங்கி அதில் வைக்க வேண்டும் என விரும்பவில்லை, இந்த திட்டத்தை வைத்து நான் பணம் சம்பாதிக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: