டெல்லிவாசிகளின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகள் குறைக்கும் காற்று மாசு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

delhiடெல்லியில் நிலவும் காற்று மாசு அந்த நகரத்தில் வசிப்பவர்காளின் ஆயுட்காலத்தை 6 ஆண்டுகள் வரை குறைப்பதாக காற்று ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் அதிக மாசு கொண்ட மிகப்பெரிய நகரமாக டெல்லி உள்ளது. நுண்ணிய துகள்கள் அடங்கிய அதிக நச்சுத்தன்மையை கொண்ட காற்றை சுவாசிக்கும் மக்கள் டெல்லி வாசிகள்தான் என்று உலக சுகாதார நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன தலைநகர் பெய்ஜிங்கைவிட டெல்லியில் அதிக காற்று மாசு நிலவுகிறது. இந்த நிலையில், புனேவை மையாக கொண்டு செயல்படும் ஐஐடிஎம் என்னும் அமைப்பு நடத்திய ஆய்வில் ஓர் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில் டெல்லியில் நிலவும் காற்று மாசானது டெல்லி வாசிகளின் ஆயுட் காலத்தை 6.4 ஆண்டுகள் வரை குறைப்பதாக அந்த ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

டெல்லியில் மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் நுண்ணிய துகள்கள் அடங்கிய மாசுப்பட்ட காற்றை சுவாசிப்பதால் மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்து வருவதாக ஆய்வு எச்சரித்துள்ளது.

டெல்லியில் உடனடியாக காற்று தரத்தை அதிகப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அந்த ஆய்வில் வலியுறுத்தியுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: