சாலை விபத்தில் ஒருநாளைக்கு 400 பேர் பலி: மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்

accidentஇந்தியா முழுவதும் ஒரு நாளைக்கு சராசரியாக 400 பேர் சாலை விபத்தில் பலியாகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கவலை தெரிவித்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற சாலை விபத்து குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த துறையின் அமைச்சர் கட்காரி கூறுகையில் ‘‘ஒரு மணி நேரத்திற்கு 57 விபத்துக்கள் நடைபெறுகிறது. இதில் 17 பேர் உயிரிழக்கின்றனர்.

குறிப்பாக இதில் 54 சதவிதம் பேர் 15 வயது முதல் 34 வயது வரையுள்ளவர்கள். இத்தகவல் தம்மை மிகுந்த கவலைக்குள்ளாக்குகிறது என்றார்.

மக்கள் இதுகுறித்து விமர்சனம் செய்வார்கள். இருந்தாலும் மக்களுக்கு நான் இந்த தகவலை சொல்ல விரும்புகிறேன். நாம் கடந்த இரண்டு வருடங்களாக சாலை விபத்தை தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம்.

ஆனால் எந்த மாற்றமும் இல்லை. இதை மாற்றுவதற்கு நாம் தொடர்ந்து முயற்சி எடுத்து வருவோம். இதை என்னால் அனுமதிக்க முடியாது. என் இதயம் அதிகப்படியான வலியால் நிரம்பியுள்ளது. இந்த அளவிற்கு போரினாலோ, தொற்று நோயாலோ, தீவிரவாதிகள் தாக்குதலாலோ மக்கள் சாகடிக்கப்படுவதில்லை என தெரிவித்தார்.

-http://news.lankasri.com

TAGS: