எழும்பூரில் இருந்து கோட்டை நோக்கி பேரணி : அற்புதம் அம்மாளுடன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

perarirvalanசென்னை: ராஜீவ் கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டு காலம் சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலை செய்யக் கோரி சென்னை எழும்பூரில் இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணி தொடங்கியுள்ளது. பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் திரைப்படத்துறையினர், நடிகர்கள், தமிழ் உணர்வாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரும் 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இவர்களின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை புனித ஜார்ஜ் கோட்டையை நோக்கி வாகனப் பேரணியை நடத்த இருந்தார் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாள் Rally from Chennai egmore to secretariat for 7 Tamils release இந்தப் பேரணிக்கு மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் எனப் பலரும் பேரணிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

முதல்வர் ஜெயலலிதாவும் பேரணிக்கு அனுமதி கொடுத்திருந்தார். இந்நிலையில் 7 பேரின் விடுதலைக்காக வேலூரில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபெறவிருந்த வாகனப் பேரணிக்கு வேலூர் மாவட்ட காவல்துறையினர் அனுமதி தர மறுத்துவிட்டனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையில் பேரணி நடைபெற உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவே பேரணிக்கு அனுமதி அளிக்க முடியாது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், வேலூர் சிறைக்குப் பதில் சென்னை எழும்பூரிலிருந்து பேரணி கிளம்பும் என பேரறிவாளனின் தாயார் தெரிவித்தார். இதனையடுத்து இன்று பிற்பகல் 1 மணிக்கு எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் இருந்து பேரணி தொடங்கியது.

திரைப்பட இயக்குநர் விக்ரமன், கௌதமன், நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோருடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர். தலைமைச் செயலகம் வரை பேரணியாக சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் தெரிவித்துள்ளார். 25 ஆண்டு காலம் தனது மகன் சிறையில் வாடி வருவதாகவும், 7 பேரையும் விடுதலை செய்ய அனைவரும் ஆதரவு தரவேண்டும் என்றும் அற்புதம் அம்மாள் கண்ணீருடன் கேட்டுக்கொண்டுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: