20 தமிழர்கள் படுகொலை- விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

andhra-policeஹைதராபாத்: 20 தமிழர்கள் படுகொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய ஆந்திரா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருப்பதி காட்டுப் பகுதியில் செம்மரங்கள் கடத்தியதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். திருவண்ணாமலையை சேர்ந்த 12 பேர், தர்மபுரியை சேர்ந்த 7 பேர் சேலத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்கள்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு ஆந்திர மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் டி.ஐ.ஜி. தலைமையிலான விசாரணை குழுவை அமைத்தது. சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் உறவினர்கள் மற்றும் மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, ஆந்திர மாநில போலீஸ் விசாரணை அறிக்கையில் குறைபாடுகள் இருக்கிறது என்று பலியானவர்களின் உறவினர்கள் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து போலீசின் விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஆந்திர அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 8-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
tamil.oneindia.com

TAGS: