தீனதயாளன் வீட்டில் தோண்ட தோண்ட சிலைகள்: முக்கிய பிரமுகர்கள் சிக்குகிறார்கள்?

chola_statue_001சென்னையில் தீனதயாளன் வீட்டில் இதுவரையிலும் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பழங்கால சிலைகளை கடத்தி விற்று வந்த ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபரும், சிலை கடத்தல் மன்னனுமான தீனதயாளன் கடந்த வாரம் பொலிசில் சரணடைந்தார்.

பொலிசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல சிலைகளை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் 300க்கும் மேற்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சிலைகள் கேரளா, மகாராஷ்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்று தொல்லியியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே கடந்த 10 நாட்களாக சிலை கடத்தல் பற்றியும், வெளிநாட்டு தொடர்புகள் பற்றியும் தீனதயாளனிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பொறுமையாக பதிலளித்த அவர் சிலை கடத்தலின் பின்னணி குறித்த மர்மங்களையும் விளக்கி கூறியிருக்கிறார்.

சிலை கடத்தல் வழக்கில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து மேலும் பலர் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பதுக்கி வைத்திருந்த சிலைகளின் மொத்த மதிப்பு 1000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு புராதனமான கோவில்களில் இருந்து பழங்கால சிலைகளை திருடி வெளிநாட்டில் விற்பனை செய்துள்ளதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: