இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு மலேசியா வந்திருந்தபோது தலைநகர் கோலாலம்பூரில் உள்ள இந்திய கலாசார மையத்துக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பெயர் சூட்டப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, பெயர்மாற்றம் செய்யப்பட்ட இந்த மையத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் வெண்கலச்சிலை நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
இந்த சிலை திறப்புவிழாவில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றி, தற்போது மலேசியாவில் வாழ்ந்து வரும் ராணி ஜான்சி படைப்பிரிவில் பணியாற்றிய மூன்று வீரமங்கைகள் உள்பட ஒன்பது சுதந்திர போராட்ட தியாகிகள் பங்கேற்றனர். குத்து விளக்கு ஏற்றி சிலை திறந்து வைக்கப்பட்டதும் தியாகிகள் அனைவரும் நேதாஜியின் வீரம் உள்ளிட்ட சிறப்பியல்புகளைப் புகழ்ந்துப் பேசினர்.
ராணி ஜான்சி படைப்பிரிவில் பணியாற்றிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனையான 90 வயது மீனாட்சி பெருமாள், இந்திய தேசிய ராணுவத்தின் எழுச்சிப் பாடல்களை தமிழிலும், வங்காள மொழியிலும் குரலில் வீரம் தொனிக்கப் பாடியபோது விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் உணர்ச்சிப் பெருக்கில் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து, பரவசப்பட்டனர்.
-http://www.maalaimalar.com
ஜெய் ஹிந்த் ….
இதில் மலேசிய தமிழருக்கு என்ன பெரும்மை ?
ராமசாமி நாய்க்கேருக்கும் ஒரு சிலை வேணும்
ஐயா தமிழர் எழுச்சிப்பறை , கொஞ்சம் மெதுவா பேசுங்க . சொரியாரின் சீடர்களுக்கு கேட்டு விட போவது . அதற்கும் இளிச்சவாயன் தமிழன் தான் பணம் கொடுக்கணும் ..
சுபாஷ் சந்திரபோஸ் மாபெரும் இந்திய விடுதலைக்காகப் போராடிய போராளி.அவரது படைப்பிரிவில் தமிழர்கள் நிறையவே பங்கேற்று இருக்கின்றனர். அவரால் நமக்குப் பெருமையே!