தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்த பெண்… தமிழகத்தில் ஒரு உலக சாதனை !

pic03சென்னை: காஞ்சிபுரத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21 ஆம் தேதி சர்வேதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என ஐ.நா. சபை அறிவித்துள்ளது. அதன்படி, சர்வதேச முதல் யோகா தினம், கடந்த ஆண்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டது.

அதேபோல் 2வது சர்வதேச யோகா தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. பல்வேறு மாநிலத்தில் யோகா தினத்தை கொண்டாடும் வகையில் யோகாசன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிரதமர் மோடியும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்தார்.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் வசித்து வரும் கே.பி ரஞ்சனா (34). என்ற பெண் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். நேபாளத்தை சேர்ந்த உத்தம் முக்தன் கடந்த 2015-ல் தொடர்ந்து 50 மணி நேரம் யோகா செய்து அசத்தியுள்ளார்.

அவரை தொடர்ந்து, ரஞ்சனா ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிட இடைவெளியில் 600 யோகா ஆசானங்களை செய்துள்ளார் என்று மஹாமஹாரிஷி அறக்கட்டளை நிர்வாகி ரமேஷ் ரிஷி தெரிவித்துள்ளார். ஜூன் 19-ம் தேதி யோகா ஆசனத்தை செய்ய தொடங்கிய ரஞ்சனா, இன்று மதியம் 3 மணியளவில் தன்னுடைய ஆசானத்தை முடித்துள்ளார். தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார். ரஞ்சனா உணவாக வெறும் பழ ரசத்தையை எடுத்து கொண்டதாக அவர் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: