இஸ்ரோ வரலாற்றில் முதன்முறையாக 20 செயற்கைகோளுடன் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது

Isro-logoஇஸ்ரோ வரலாற்றில் முதல்முறையாக, 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி- சி34 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின்2-வது ஏவுதளத்தில் இருந்து 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி – சி 34 ராக்கெட்இன்று காலை 9.26 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

இதற்கான 48 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று முன்தினம் காலை 9.26 மணிக்கு தொடங்கியது.

20 செயற்கைக் கோள்களில் சத்தியபாமா பல்கலைக்கழகம், புனே பொறியியல் கல்லூரி, இஸ்ரோவின் கார்ட்டோசாட்-2 ஆகிய 3 செயற்கைக் கோள்கள் இந்தியாவை சேர்ந்தவை.

மற்ற 17 செயற்கைக் கோள்களும் அமெரிக்கா, ஜேர்மனி, கனடா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவை.

20 செயற்கைக்கோள்களிலும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, 2008-ம் ஆண்டு ஒரே ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்தது.

-http://news.lankasri.com

TAGS: