டமாஸ்கஸ்: ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் தீவிர ராணுவ நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர். இதற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆத்திரத்தில் உள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகளின் சிசிஏ (காலிபட் சைபர் ஆர்மி) எனப்படும் அமைப்பு ஒரு கொலை பட்டியல் வெளியிட்டுள்ளது.
அப்பட்டியலில் 4 ஆயிரம் பேர் இடம் பெற்றுள்ளனர். அவற்றில் பாதிக்கும் மேற்பட்டோர் அமெரிக்கர்கள். இவர்கள் தவிர இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவை சேர்ந்தவர்கள் அடங்குவர்.
இந்த கொலை பட்டியலில் 285 இந்தியர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. அவர்களின் முழு முகவரிகள், இ-மெயில் விலாசங்களும் உள்ளன. பட்டியலில் இடம் பெற்றவர்கள் பொதுமக்களா? ராணுவ அதிகாரிகளா? அல்லது அரசு அதிகாரிகளா என்பது தெளிவாக தெரியவில்லை.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொலைப்பட்டியலில் இந்தியர்களின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதால் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-http://www.maalaimalar.com