“டைம்ஸ்’ வெளியிட்டுள்ள ஆசிய அளவிலான தரமான உயர்கல்வி நிறுவனங்களின் பட்டியலில் முதல் 100 இடங்களில் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
உயர்கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அவற்றுக்கான ரேங்கிங்கை பல்வேறு அமைப்புகள் வெளியிடுகின்றன. இதுபோல “டைம்ஸ்’ எனும் அமைப்பு தரவரிசைப் பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஆசிய அளவிலான பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் 8 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
பட்டியலின் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் முதல் இடத்திலும், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 2-ஆம் இடத்திலும், சீனாவின் பெகிங் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
27-ஆவது இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் கழகமும் (ஐஐஎஸ்சி), மும்பை ஐஐடி 27-ஆவது இடத்திலும், காரக்பூர் ஐஐடி 51-ஆவது இடத்திலும், தில்லி ஐஐடி 60-ஆவது இடத்திலும், சென்னை ஐஐடி 62-ஆவது இடத்திலும், ரூர்கி ஐஐடி 65-ஆவது இடத்திலும், குவாஹட்டி ஐஐடி 80-ஆவது இடத்திலும், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் 84-ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, கான்பூர் ஐஐடி 101-110 தரவரிசையிலும், பஞ்சாப் பல்கலைக்கழகம் 111 – 120 தரவரிசையிலும், கொல்கத்தா பல்கலைக்கழகம், புணே பல்கலைக்கழகம் ஆகியன 141 – 150 தரவரிசையிலும், உத்தரப் பிரதேசம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் 151 – 160 தரவரிசையிலும், தில்லி பல்கலைக்கழகம் 161 – 170 தரவரிசையிலும், பிலானி பிர்லா தொழில்நுட்ப அறிவியல் கல்வி நிறுவனம் 191 – 200 தரவரிசையிலும் இடம்பெற்றிருக்கின்றன.
குவாகரெல்லி சைமண்ட்ஸ் (கியூ.எஸ்.) எனும் நிறுவனமானது அண்மையில் வெளியிட்ட பட்டியலில் 43-ஆவது இடம் பிடித்திருந்த சென்னை ஐஐடி, “டைம்ஸ்’ தரவரிசைப் பட்டியலில் 62-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
-http://www.dinamani.com