இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பாம்பன் நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள். மீனவர்களை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாட்டு படகைகளையும், விடுவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்திய கடலோரப் பகுதியில் அச்சமின்றியும், சுதந்திரமாகவும் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com