இந்தியா நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் பகுதியில் கொல்லப்பட்ட இளம் தீவிரவாதியை சுதந்திர இயக்கத்தின் தியாகியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தை, பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
ஒரு வாரத்திற்குமுன், புர்ஹான் வானி என்ற தீவிரவாதி இந்தியா படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தீவிரவாதிகளை பாகிஸ்தான் தொடர்ந்து புகழ்பாடி வருவது ஏமாற்றம் அளித்து வருவதாக இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவை நோக்கிக் குறிவைக்கப்பட்டுள்ள தீவிரவாதம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள பொது எல்லையை தாண்டி பரவலாக பரவி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.
புர்ஹான் வானியின் மரணம் அவருடைய இளம் ஆதரவாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே பல நாட்களாகக் கொடிய வன்முறை சம்பவங்கள் ஏற்பட வழிவகுத்துள்ளது.
இதுவரை இந்த வன்முறையில் டஜன்கணக்கான மக்கள் பலியாகி உள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, ஊரடங்கு உத்தரவு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
திட்டமிடபட்டிருந்த இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றைக் ஒடுக்கும் நோக்கில் மொபைல் தொலைபேசி சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. -BBC
உலகம் அமைதியுடனும் செழிப்புடனும் வாழ ஒரே வழி………”ஒன்று” அழிய வேண்டும் அல்லது அழிக்க பட வேண்டும்…………..? தெரிந்தால் மகிழ்ச்சி ….
இந்தியா ஒரு புண்ணாக்கு. எனக்கு புரிய வில்லை– கையால் ஆகாத எண்ணங்கள்– அப்பட்டமாக இந்த ஈனங்கள் பண்ணும் அநியாயத்தை ஒன்றும் செய்யாமல் பார்த்துக்கொண்டு இருக்கும் மடையர்கள்– எவ்வளவோ செய்ய முடியும்– சுய மரியாதை இல்லா பிண்டங்கள். சாகிர் போன்ற நாதாரியை வளர விட்டதே வாக்கு வங்கிக்காகவே.