எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் மாமனிதர்

rejiமும்பையைச் சேர்ந்த ரெஜி என்பவர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நவி மும்பையில் வசித்துவந்த ரெஜி, கடந்த 2009 ஆம் ஆண்டில் மும்பை அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

அப்போது எலும்புகள் வெளியே தெரியுமளவுக்கு மெலிந்து காணப்பட்ட குழந்தை ஒன்றைக் கண்டு இரங்கிய அவர், அந்த குழந்தையின் உடல்நலன் குறித்து விசாரித்துள்ளார்.

அந்த குழந்தை எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரெஜி,

தனது குழந்தைகளுடன் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சமூகத்தால் ஒதுக்கப்பட்ட குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்துள்ளார்.

தனது மனைவியின் முழு ஆதரவோடு எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறார். இதனால் அப்பா ரெஜி என்று அன்போடு அவர் அழைக்கப்படுகிறார்.

-http://news.lankasri.com

TAGS: