தமிழக மீனவர்கள் விவகாரத்தில் ரஜினிகாந்த் குரல் கொடுக்காததைக் கண்டித்து, நாளை மறுநாள் வெளிவர இருக்கும் கபாலி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை வேளச்சேரியில் இன்று ரஜினிகாந்த்தின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கவில்லை என்று கூறி, நடிகர் ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்து ஏழை, எளியோர், நடுத்தர சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளச்சேரி காந்திநகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், நடிகர் ரஜினிகாந்த் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதற்கு குரல் கொடுக்கவில்லை எனவும், அரசியலுக்கு வருவது போன்று பேசி இளைஞர்களை குழப்பி வருவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ரஜினிகாந்த் மீது மோசடி வழக்குப்பதிவு செய்யக் கோரி முழக்கமிட்டனர். அப்போது ரஜினிகாந்தின் உருவபொம்மையை எரித்த அவர்கள், கபாலி திரைப்படத்தை தடை செய்யுமாறு வலியுறுத்தினர்.
நாளை மறுநாள் ‘கபாலி’ வெளியாகவுள்ள சூழ்நிலையில், இந்த போராட்டம் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-http://www.tamilwin.com
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
அதாவது தமிழ் நாட்டில் உள்ள எல்லா கட்சிகளின் தலைமையும், வடுகர் வசமே உள்ளது. தமிழர்கள் கட்சி ஆரம்பித்தாலும் அதிலும் வடுகர் ஆளுமையே மேலோங்குகிறது. அரசுப்பணிகளில் 85 விழுக்காடு வடுகர்கள், வடுக மலையாளிகள், ஒடிஷா மாநிலத்தவர்களே உள்ளனர். காவல்துறையிலும் வெள்ளையன் காலம் தொட்டு நாயுடு வாசமும், திராவிடர் ஆட்சிகாலங்களில் நாயர்களும் உரிய பங்கினைப் பெற்றார்கள் .
அவ்வளவு ஏன் தமிழநாடு இந்து அறநிலையம் என்பது திராவிட அறநிலையத்துறையாகவே உள்ளது. அதுவும் போக தெரு முனையில் உள்ள பிள்ளையார் கோவில் என்றாலும் மாரியம்மன் கோவில் என்றாலும் கூட வடுகர்கள் அறங்காவலர்கள். அவர்கள் வசமே நிர்வாகம் இருக்கும். உண்டியல் போடுவது மட்டுமே தமிழன் கடமை. இதற்கும் மேலாக இசுலாமிய மதத்திலும் வழிபாட்டுத் தலங்கள் என்பவை உருது இசுலாமியர் வசமே உள்ளது. கிறித்துவ மதத்திலும் இந்த நிலைதான்.
இதற்கும் மேலாக தமிழ் தெய்வம் கண்ணகியின் பெயரை வைத்து யான தோணாண்டிகள் கண்ணகி வழிபாடு என்று வை.கோபால்சாமி நாயிடுவாய் வைத்து ஊர் சுற்றுவதும், வள்ளல் இராமலிங்க அடிகளார் தொடங்கிய அறச்சாலைகள் அனைத்தும் வடுகர்களே நிர்வாகம் செய்வதும் என்று எதார்த்தமான உண்மையுடன் நடப்பு நிலை உள்ளது.
ஆக மொத்தம் இன்றைய தேதிவரையில் தமிழ் நாட்டில் எல்லாமே சரியாகத்தான் நடக்கின்றது.
இருந்தாலும் ஒரு உண்மை மட்டும் எனக்கு புரியவில்லை.
எல்லா பொறுப்புகளும் வடுகர் வசமே உள்ள போது ரசிகர் மன்றம் மட்டுமே தமிழர்கள் கைகளில் உள்ளதா ???
தமிழர்கள் மட்டுமே காபாலிகளுக்கு பாலாபிஷேகம் செயகின்றனரா ???
தமிழர்கள் மட்டுமே கற்பரசி குஷ்பூவிற்கு கோவில் காட்டுகின்றனரா ????
ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.!!!!!!
ஒவ்வொரு முறையும் ரஜினி படங்களுக்கு இப்படி “இலவச விளம்பரம்” தருவதில் நீங்கள் பலே கில்லாடிகள் ஆயிற்றே.
அது சரி மீனவர்கள் மட்டும்தானா ? எங்கப்பா உங்கள் விவசாயிகள் ?
ஒரு அறிவிலியின் கூப்பாடு.
எல்லாமே இலவசமாக கிடைக்க அலையும் சோம்பேறிகள் இவர்கள். எல்லாம் தாண்டி மீன் பிடித்தால் அந்த குற்றத்திற்காக பிடித்து சிறையில் அடைக்காமல் என்ன செய்ய வேண்டுமாம். முட்டாள்கள். இது போன்ற மனிதர்களால் தான் தமிழ்நாடு சோமாலியாவை போன்று தோற்றம் பெறுகிறது.
MALAYSIAKINI
Friday, Jul 22, 2016 8:35 அம் சினிமா செய்தி
“””மலேசியாவில் கபாலி டிக்கெட் கிடைக்காமல் ரசிகர் தற்கொலை”””
———————————————————————————————-
தமிழ் நாட்டு தமிழர்கள் காபாலிக்காக பாலாபிஷேகம் மட்டும்தான் செய்ய முடியும் ஆனால் எங்கள் மலேசிய நாட்டு தமிழர்கள் காபலிக்காக உயிரை தியாகம் செய்பவர்கள்.
முதலமைச்சரே பிரதமருக்குக் கடிதம் எழுதியே காலத்தைத் தள்ளுகிறார்! ஒரு நடிகர் குரல் கொடுத்து என்ன ஆகப்போகிறது? முதலமைச்சர் கடலில் கால் வைக்காத வரை எதுவும் ஆகாது!