தமிழகத்தில் தற்போது குற்றசம்பவங்கள் நாம் தமிழர் ஆட்சியல் எவ்வாறு தடுக்கப்படும் என அக்கட்சியின் ஒருங்கினணப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியிலே அவர் இதை விவரித்துள்ளார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் சட்டஒழுங்கு என்பது வெறும் வார்த்தையாக மட்டும் தான் உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் தொகை அதிகரித்துள்ளது, சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகபடியான மக்கள் வாழ்கின்றனர்.
இது போன்ற நகரங்களில் வெறும் 12,000 முதல் 20,000 காவலர்களை வைத்து இந்த மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது.
சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முக்கிய அமைச்சர்கள், முதல்வர் என முக்கியமானவர்கள் பாதுகாப்பிற்காக பல பேர் சென்றுவிட்டால், மக்களுக்கான பாதுகாப்பு பணியில் யார் ஈடுப்படுவார்.
இதற்கு கூடுதலான காவலர்களை பணிக்கு அமர்த்தி, சீருடையாற்ற குற்ற தடுப்பு காவல் படையை உருவாக்க வேண்டும் இதை தான் எங்கள் ஆட்சியின் வரைவில் அறிவித்துள்ளளோம்.
அதிகபடியான காவலர்களை உருவாக்கி மக்களுக்குள் உடுருவ விட வேண்டும். நாடு எங்கிளும் கண்காணிப்பு கருவிகளை பொறுத்தி, துணை காவல் நிலையங்களை அமைத்து, அங்கங்கே கண்காணிக்க வேண்டும் அப்பொழுது தான் குற்றங்களை தடுக்க முடியும்.
நிலம் நன்றாக இருந்தால் நல்ல செடியும், பயிறும் விளையும், நிலம் நஞ்சாகிவிட்டது என்றால் நஞ்சு தான் விளையும்.
ஒரு தேசத்தின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப்பறையில் தான் தீர்மனிக்கப்படுகின்றது.
தற்போது வணிகமயமாகி உள்ள இந்த கல்வி முறை எதையும் கற்ப்பிக்கவில்லை, இதை மாற்ற வேண்டும் என்பதே எங்களின் குறிக்கோள் என கூறியுள்ளார்.
-http://news.lankasri.com
“ஒரு தேசத்தின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப்பறையில் தான் தீர்மனிக்கப்படுகின்றது” – இதுவொரு நல்லச் சேதி. சீமான் அவர்களுக்கு நம் பாராட்டுக்கள். ஒருப் பள்ளி மாணவனின் எதிர்க்காலத்தை அந்தப் பள்ளிக்கூடமே தீர்மானிக்கின்றதென்பது நாம் அனைவரும் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும்; அறிந்ததை மதித்து நடக்கவும் வேண்டும்.
இப்போது வகுப்பறையின் பக்கத்தில் சாராயக்கடைகளைத் திறந்து வைத்திருக்கிறார்கள் திராவிட ஆட்சியினர்! இது தான் இப்போதைய கல்வி!