சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், அவரை விடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்த 8ம் திகதி சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கட்டப்பட வேண்டும் என்று சேலம் மக்கள் குழுவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
போராட்டம் நடத்தியவர்களில் 3 பேரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதில் 2 பேர் ஜாமீனில் வெளிவந்துள்ளனர். மற்றொருவரான சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ் ஜாமீனில் விடுவிக்கப்படவில்லை. இதனால் அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அனைவருக்கும் எழும் ஒரே கேள்வி யார் இந்த பியூஸ் மானுஷ்? அப்படி என்ன செய்து விட்டார் என்பது தான்.
சேலம் தருமபுரி மாவட்டங்களில் பெரும் பணியாற்றி வரும் பியூஸ் மானுஷ் தனிப்பட்ட முயற்சியில் காடுகளை உருவாக்கி சாதனை புரிந்த முன்னுதாரண மனிதர்.
பல அரிய பணிக்காகவே கடந்த 2015ம் ஆண்டிற்கான CNN-IBN Indian of the year என்ற விருதை பெற்றார்.
பியூஷ் ஜாமீன் பெற்று விட்டார். அதிகார பூர்வ செய்தி
காடுகளை உருவாக்கியது, நீர்நிலைகளை சீரமைத்து புதிதாகவும் நீர்நிலைகளை உருவாக்கியது, கேம்பிளாஸ்ட் என்னும் MNC கம்பெனியிடம் இருந்து மேட்டூரை காத்தது என பியூஷ் இந்த மண்ணிற்கு என்று இவ்ளவு சேவைகள் செய்ததை இவரை கைது செய்து அதன் மூலம் இந்த உலகிற்கே பியூஷ் செய்த சேவைகளை தெரியப்படுத்திய ஜெயலலிதா அரசாங்கத்துக்கும், சேலம் காவல்துறைக்கும் நன்றிங்கோ.
பியூஷ் ஜாமீன் பெற்று விட்டார். அதிகார பூர்வ செய்தி.
மகிழ்ச்சி.
யார் இவர்?
ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் பியூஸ் மானுஷ். அவரது தாத்தா காலத்திலே சேலத்திற்கு குடி பெயர்ந்து விட்டார்.
ஆரம்பத்தில் பியூஸ் சேத்தியா என பெயர் கொண்ட அவர் தனது சாதிப் பெயரை துறந்து மனிதத்தை குறிக்கும் ‘மனுஷ்’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டவர்.
கடந்த 2010ம் ஆண்டு சில சூழலியல் நண்பர்களுடன் கரம் கோர்த்து Salem Citizen’s forum எனும் இயக்கத்தை தொடங்கினார்.
தர்மபுரியின் கஞ்சமலையில் சட்டவிரோத சுரங்க தொழிலை எதிர்த்து போராடியவர். கூட்டுறவு காடுகள் திட்டத்தை தொடங்கி, அங்கு 100 ஏக்கரில் ஒரு லட்சத்திற்கும் மரக்கன்றுகளை நட்டு ஒரு தனிக் காட்டையே உருவாக்கி சாதனை படைத்தவர்.
இவரின் இந்த கடின உழைப்பால் அக்காட்டில் 8 குளங்கள், 2 ஏரிகள், 17 தடுப்பணைகள் உள்ளது என்னும் தகவல் அனைவரையும் வியக்க வைக்கிறது.
இது தவிர கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசின் எந்தவொரு உதவியும் இல்லாமல் பொதுமக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார்.
அதுமட்டுமல்லாது சென்னை, கடலூர் வெள்ளத்தின் போது மக்களை ஒன்று திரட்டி நிவாரணப் பொருட்களை சென்னைக்கும் கடலூருக்கும் இரவு, பகல் பாராமல் அனுப்பிவைத்து உதவினார்.
சேலத்தில் நீர் பிடிப்பு மழைகளாக கவுத்திமலை, கல்வராயன் மலை விளங்குகிறது. இதை தகர்த்துவிட்டு அதன் அடிவாரத்தில் இருக்கும் இரும்பை எடுக்க முயன்ற ஜிண்டால் நிறுவனத்தை எதிர்த்து போராடி அதில் வெற்றியும் கண்டார்.
சேலத்தில் அழிவின் பிடியில் இந்த நான்கு ஏரிகள், இரண்டு தெப்பக்குளங்களை மீட்டெடுத்து அந்த பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாக மாற்றினார்.
இந்த நிலையில் தான் கடந்த 8ம் திகதி சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் கட்டப்படும் ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்களுக்கு இடையூறு இன்றி கட்டப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தியதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த வாரம் நிகழ்ந்த சகோதிரி வினுப்ரியாவின் தற்கொலைக்கு நடிவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டிய சேலம் காவல்துறையை கண்டித்து தொடர்ந்து போராடி வருகிறார்.
இந்த தனி ஒருவனை விடுதலை செய்யக் கோரி சமூகவலைதளத்தில் பலரும் இவருக்கு ஆதரவாக பதிவுகளை பதிந்த வண்ணம் உள்ளனர்.
-http://news.lankasri.com
தலைவா தலை வணங்குகிறேன். தமிழ் நாடு அரசாங்கமே பியூஸ் மானுஷை உடனே விடுதலை செய்யாதே. அவர் புகழ் உலகம் முழுதும் பரவட்டும்.
இப்படிப்பட்டவர்கள் தமிழினத்த்தவரிடேயே நிறைய உருவாக்க வேண்டும் .
பியூஸ் மனுஷின் நேர்காணலை நானும் பார்த்தேன் — தமிழ் நாட்டு காவல் உண்மையிலேயே நாதாரிகள்- இங்குள்ளவன் களை விட கேவலமானவர்கள். நல்லதுக்கு காலம் இல்லை என்பது உண்மையே– கேட்கவே சகிக்க வில்லை. இப்படியுமா ஈன ஜென்மங்கள்- அதிகார துஷ் பிரயோகம். சினிமாவில் தான் கதாநாயகன் காவலை துவைப்பது எல்லாம்– நம்மை எல்லாம் மடையனாக்கும் தமிழ் திரைப்படங்கள்.
மனுஷ் செய்த காரியத்தால் அரசியல்வாதிகளுக்கு கிடைக்க வேண்டிய லஞ்சப்ப பணம், காவல்துறைக்கு கிடைக்க வேண்டிய லஞ்சப்ப பணம் அனைத்தும் போய்விட்டதே! அப்புறம் ஏன் அவனுக்கு கோபம் வராது?