சமூக வலைத் தளங்களில், இணையத்தில் கபாலி படம் குறித்து எதிர்மறையாக வரும் விமர்சனங்களின் பின்னணியில் ‘வேறு அரசியல்’ உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ரஜினியின் கபாலி படம் நேற்று வெளியாகி வசூலில் புது சரித்திரம் படைத்துள்ளது. மூன்று நாட்கள் முடிவில் இந்தப் படத்தின் வசூல் 200 கோடிகளுக்கு மேல் போகும் எனக் கணித்துள்ளது பாக்ஸ் ஆபீஸ்.
இது மட்டும் நடந்தால், உலகளவில் புதிய சரித்திரத்தைப் படைத்த பெருமை கபாலி என்ற படத்துக்கும் அதற்கு முழுக் காரணமான ரஜினிக்கும் கிடைக்கும். அதிக அரங்குகளில் வெளியான படம், அதிக நாடுகளில் வெளியான (53) முதல் இந்தியப் படம் என கபாலி வெளியாகும் முன்பே பல சாதனைகளை உருவாக்கிவிட்டது. அவற்றையெல்லாம் இன்னொரு ரஜினி படம் மட்டுமே இனி உடைக்க முடியும் என்பதுதான் நிலைமை.
ரஜினி அடிக்கடி சொல்வார்: ‘நிச்சயம் ஒரு நாள் தமிழர்கள் தலைநிமிர்ந்து சொல்லும்படியாக ஏதாவது நான் செய்வேன்’, என்று. கபாலி மூலம் அதை நிரூபித்திருக்கிறார். இன்று உலகமே கபாலி என்ற தமிழ்ப் படம் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது. “அவர் அரசியல்வாதியல்ல. மக்கள் அவருக்கு ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்து அதிகாரத்தில் அமர்த்தவில்லை. அவர் ஒரு நடிகர். ஒரு கலைஞராக தன் துறையில் உலகளவில் புதிய சாதனைகள் படைத்து அவர் தமிழர்களின் பெருமையாக நிற்கிறார்.
இன்று ரஜினி என்றால், உலகம் முழுவதும் தமிழ் தெரிகிறது, தமிழர்கள் தெரிகிறார்கள். வேறென்ன செய்ய வேண்டும் அவர்?,” என்கிறார் ஒரு திரைப்பட விமர்சகர். “ஆனால் சமூக இணைய தளங்களைப் பாவிப்போரில் பலரது மன நிலை வக்கிரத்தின் உச்சமாக உள்ளது.
ஒரு படம் ஜெயிக்க வேண்டும்… இன்டஸ்ட்ரி வாழ வேண்டும் என்றுதான் பொதுவாக நினைப்பார்கள். ஆனால் இவர்களோ எப்போதுடா ஒரு படம் வீழும் என்ற எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். அல்லது காலைப் பிடித்து இழுத்து வீழ்த்தப் பார்க்கிறார்கள். இது ஆபத்தான போக்கு. ஒரு படத்தின் நிறை குறைகளை அதன் தரம் பார்த்துச் சொல்லத் தெரியாத நிலைதான் இவர்களிடம் உள்ளது,” என்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.
“ரஜினி சாரின் கபாலி நல்ல படம்தான். அதில் அப்படி ஒன்றும் தப்பாக இல்லை. அதிலும் ரஜினியின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் சான்சே இல்லை. ஆனால் அந்தப் படம் தோற்க வேண்டும் என்று யாகமே நடத்துவார்கள் போலிருக்கிறது இணையப் போராளிகள். காரணம் இயக்குநர் ரஞ்சித் மீதான இவர்களின் காழ்ப்பு. ஒரு தமிழ்ப் படம் உலக அளவில் சாதனைகள் செய்து கொண்டிருக்கும்போது, அதனை இன்னும் உற்சாகப்படுத்த கைகொடுக்காமல் காலைப் பிடித்து இழுப்பது மன நோயின் அறிகுறி…” என்கிறார் ஒரு இயக்குநர்.
கபாலி படத்துக்கு மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பு, படம் பார்க்க குவியும் அவர்களின் எண்ணிக்கை திரைத்துறைக்கு புது உற்சாகம் தரும் சூழலில், படத்தைப் பற்றி வேண்டுமென்றே எதிர்மறையாகப் பேசுவது, குறிப்பாக இயக்குநர் மீதான வன்மத்தில் குறிப்பிட்ட சாயம் பூச முயல்வது தமிழரின் வழக்கமான குணமாகிவிட்டது என ரஜினி ரசிகர்கள் இணையத்தில் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்தக் கருத்துகளைக் கேட்ட பிறகு, கபாலியில் ரஜினி சொல்லும் தமிழ் நண்டு கதைதான் நினைவுக்கு வருகிறது!
“இது ஒன்றும் தமிழகம் அல்ல……
கர்நாடகா…..
இங்கே வந்து இப்படி எல்லாம் அளப்பறையை கொடுக்க கூடாது” —-
வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகள் ரஜினியின் கபாலிக்கு எதிராக, திரையரங்கங்கள் முன்பு போர்க்கொடி.
=======================
படித்ததில் வலித்தது.
தமிழ்நாட்ல தெலுங்கன் கன்னடன் மலையாளிக்கு சொம்பு தூக்கும் நாய்களும்,
திராவிட நச்சு பாம்பை ஆதரிக்கும் தமிழர்களுக்கும்..
ங்கோத்தா தமிழனு எவன் அடிச்சாலும் உங்களுக்குதான் வலிக்காதே.
சாதிய பேர சொல்லி அடிச்சா தானே வலிக்கும்.
#த்தூ..
பத்த வச்சிட்டியே பரட்ட.. அப்போ மலேசிய தமிழர்கள் கதி !
(நன்றி குமாரு )
இது தமிழ் திரைப்படம் — என்னுடைய வாழ்த்துக்கள். நன்றாக வெற்றி அடையட்டும். ஆனாலும் ரசிகர்களின் சில நடைமுறைகள் வெட்கக்கேடானவை. பால் அபிஷேகம் போன்றவை ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. உண்மையில் ரஜினி எப்பேர் பட்டவர் என எனக்கு தெரியாது. ஆனால் தமிழ் பள்ளிக்கு நன்கொடை தருகிறேன் என்று கூறி கொடுக்க வில்லை என்று இங்கு ஒருவர் கூறி இருந்தார். தமிழர்களுக்கு ஏதாவது MGR போன்று செய்திருந்தால் நன்றாக இருக்கும். எதிர்பார்ப்பதும் தவறே.
கபாலி இயக்குநர் ஆய்வு சினிமாத்தனம் சரியில்லை..
வசனம் எடுபடவில்லை.
கபாலி யார் ? இதிகாச கதையை திரிபு பித்தலாட்டம் செய்த ரஞ்சிட் யார்?
கபாலத்தை கையில் ஏந்தியவர் கபாலி. யாருடைய கபாலத்தை ? பிரம்மாவின் கபாலத்தை. ஏன் ஏந்தினார் ?
சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.
சிவபெருமானோ ஆதியும், அந்தமும், பிறப்பும் இறப்பும் இல்லாது யாவருக்குமாகிய தலைவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது. திருமயிலை அல்லது மயிலாப்பூர் என்பதும் இத்தலத்திற்கு வேறு பெயர்கள்.
பிரமனின் தலையைக் கொய்த செயல் சிவபெருமானிம் எட்டு வீரச் செயல்களில் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் திருக்கண்டியூர் இந்த அட்ட வீரட்ட தலமாக உள்ளது. சுவாமியின் திருநாமம் பிரமசிரக்கண்டீஸ்வரர்.
பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் – கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.
சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.
கபாலி இயக்குநர் ஆய்வு சினிமாத்தனம் சரியில்லை..
வசனம் எடுபடவில்லை. வறுமைதான் போதைப்பொருளின் பொருளியல் சதிதான் இனத்தின் விதியாகவுள்ளது.சமுதாயத்தை சுறண்டும் பொருளாதார திருட்டுப் பேய்களை விட்டு இனத்தை தமிழர்களை போதை பேடிகளாக காட்டியது குற்றம். இண்டியன் என்ற போதைகள் உலக அச்சுறுத்தல் அல்ல! போத்தா சின்னின் சீடன் தானே பெந்தொங் காளீ. இன்னாட்டில் அந்த இருவனையும் அடக்கியது போலீஸ்தானே? கபாலி போல எந்த சூரனும் தமிழனா வந்து கடசியில் மீண்டும் ஜெயிலுக்கு போவது விவேகமா? இது தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் இழுக்கு.நீதிக்கு போராடிய தமிழன் இறுதியில் ஜெயிலில் சாவது சட்டம் செய்த குற்றம். ரஜினி ரஞ்சிட் இருவரும் தமிழனல்ல. இண்டியன் என்ற இந்தி இந்துத்துவா மோடியின் RSS தமிழன் மீதான இன்னொரு கயமைத்தனம். படம்தானே என்று குதிக்க இண்டியா இன அரசியல் சதி புரிய வேண்டும். RSS சதியை ஒவ்வொரு சுத்தத் தனித்தமிழனும் படிக்கனும். சினிமா ஊடகம் வெறித்தனமா இனத்தை அழிக்கும்.வேடிக்கை உபாதைகளுக்கு சொறிந்து சுகம் காண வேண்டாம்.
தமிழர் தேசியம் மலேசியா இயக்குநர் பொன் ரங்கன்.
முதலில் இலவசத்துக்கு அலையும் தமிழர்களே மாறுங்கள் . வெட்க கேடு.
நண்டு கதை …… வேலை வெட்டி இல்லாதா சோம்பேறிங்க …